இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ டிட்வா புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதியில் நிலவுகிறது.. இந்த புயல் தற்போது வேதாரண்யத்தில் இருந்து தென்கிழக்கே 110 கி.மீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென் கிழக்கே 150 கி.மீ தொலைவிலும் புதுவையில் இருந்து தெற்கு – தென்கிழக்கே 250 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 350 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது..
இது மேலும் வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வட தமிழகம் – புதுவை – தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும்.. இந்த புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகரும் போது, வட தமிழகம் புதுவை கடலோர பகுதிகளில் இன்று நள்ளிரவில் 60 கி.மீ தொலைவிலும், நாளை அதிகாலை 50 கி.மீ தொலைவிலும், மாலை 25 கி.மீ தொலைவிலும் டிட்வா புயலின் மையப்பகுதி நிலவ வாய்ப்புள்ளது..
அதிகனமழை எச்சரிக்கை, நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காரைக்கால், புதுச்சேரிக்கு தரப்பட்டுள்ளது.. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. நாளை மாலை 5.30 மணிக்கு பின்னர் முதல் புயல் வலுவிழக்கும்.. டிட்வா புயல் கரையை தொடுவதற்கு வாய்ப்பு கிடையாது.. கடலோர பகுதிகளில் புயலின் மையப் பகுதி நிலவுவதற்கு வாய்ப்பு உள்ளது.. நாளை மாலைக்கு பின்னர் புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்..” என்று தெரிவித்தார்..



