கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி ரூ.1000 பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கம் தொடங்கியது. கடந்த முறை மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள், ஆவணங்கள் சரியில்லாமல் நிராகரிக்கப்பட்டவர்கள், கடந்த சில மாதங்களில் திருமணமான பெண்களும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டது.
மேலும் குடும்ப தலைவி மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டியது இல்லை என்றும், ஒரு குடும்பத்தில் தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த குடும்பத்தில் இருக்கும் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டது. அதன்படி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தீர்வு பெற உள்ளன. ஆன்லைன் சேவையின் அறிமுகம் மகளிருக்கு விண்ணப்ப நிலையை எப்போது வேண்டுமானாலும் அறியமுடியும். இந்த நிலையில் புதிய பயனிகளுக்கு எப்போது மகளிர் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர்,” தமிழ்நாடு அரசு மகளிர் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக நம்முடைய அரசு மகளிருக்கான அரசாக விளங்குகிறது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் 1 கோடியே 20 இலட்சம் பேருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் அனைத்து மகளிர் தொகை திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.” என்றார்.
Read more: வேகமெடுக்கும் இன்ஃப்ளூயன்ஸா பரவல்; ஜப்பானில் விரைவில் லாக்டவுன்? பள்ளி, கல்லூரிகள் மூடல்!