நாடு முழுவதும் தெரு நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன. பொதுமக்களும், குறிப்பாக குழந்தைகளும் தெரு நாய்களின் கடியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டிலும் தெரு நாய் கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன..
ரேபிஸ் நோய் உள்ள ஒரு நாய் கடித்தால், ரேபிஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இது ஒரு தீவிரமான நோயாகும்.. இதற்கென பிரத்யேக சிகிச்சை முறை எதுவும் இல்லை என்பதால், இது மனிதர்களின் உயிருக்கே ஆபத்தானது. தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, கருத்தடை அறுவை சிகிச்சை அல்லது தடுப்பூசி போடுவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்..
தெரு நாய் கடியால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் மருத்துவ உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.. மேலும் தெரு நாய் கடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதே போல் செல்லப் பிராணிகளுக்கும் முறையாக தடுப்பூசி போட வேண்டும்.
இந்த நிலையில் ஆக்ரோஷமான நாய்களை தடை செய்வது அல்லது முறைப்படுத்த சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது ரேபிஸ் நோய் தாக்கிய நாய்களை எங்கு வைத்து பராமரிக்கப் போகிறீர்கள் என்று அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்..
அதற்கு, ரேபிஸ் நோய் தாக்கிய நாய்களுக்காக தனி காப்பகங்கள் அமைக்க உள்ளதாக அரசு தரப்பு விளக்கம் அளித்தது.. அப்போது நீதிபதிகள், காப்பகங்கள் அமைக்கப்பட்டால் நாய்களுக்கு உணவளிக்கும் பணி செய்ய யாருக்கு தைரியம் உள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் வெளிநாடுகளில் தெரு நாய் பிரசனை எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை அறிந்து நாமும் அதை பின்பற்றலாம் எனவும் நீதிபதிகள் ஆலோசனை வழங்கினர்.. தெருநாய் பிரச்சனை தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரிப்பதால் இந்த வழக்கையும் உச்சநீதிமன்ற அமர்வுக்கு மாற்றியும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்..
Read More : அகவிலைப்படி 3% வரை உயர்வு.. மத்திய ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. வெளியான அப்டேட்..!!