“ ரூ.309 கோடி நிதி எங்கே போனது? விவசாயிகளை ஏமாற்றுவதை எப்ப நிறுத்துவீங்க?..” முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!

67bc6feae8ae1 annamalai slams dmks language policy hypocrisy 241101450 16x9 1

தமிழ்நாடு குறுவை பருவத்தில் அதிக நெல் உற்பத்தி மற்றும் கொள்முதலில் சாதனை படைத்துள்ளதையடுத்து விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி விரைந்து ஆணை வழங்கிடவும், தமிழ்நாட்டில் நெல் விவசாயிகளின் அவசர மற்றும் முக்கியமான தேவைகள் தொடர்பாக வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்..


இந்த நிலையில், தமிழக முதல்வர் முதல்வருக்கு கடிதம் எழுதியதை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தமிழக நெல் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாமல், ஒவ்வொரு ஆண்டும், நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கிய நிலையில், திமுக அரசுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததும், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என்று ஏமாற்று வேலை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 4 ஆண்டு திமுக ஆட்சியில், சேமிப்புக் கிடங்குகள், உணவுக் கிடங்குகள் அமைக்க, ரூ.309 கோடி செலவிட்டதாக திமுக அரசு கூறியிருக்கிறது.

ஆனால், விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்கிறது. எங்கே சென்றது இந்த ரூ.309 கோடி நிதி? நெல் கொள்முதல் வாகனங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய போக்குவரத்து நிதியில், அமைச்சர் திரு. சக்கரபாணியின் துறையான உணவுப் பொருள் வழங்கல் துறையில், ரூ.160 கோடி ஊழல் நடைபெற்றிருந்ததைக் குறித்து சமீபத்தில் கூறியிருந்தோம். இதன் காரணமாக, நெல் கொள்முதலில் ஏற்பட்ட 30 – 40 நாட்கள் தாமதத்திற்கு திமுக அரசே முழு பொறுப்பு.

கடந்த ஒரு மாதமாக, நெல் கொள்முதல் தாமதத்தைக் குறித்து விவசாயிகள் பல முறை கோரிக்கை வைத்தும், தஞ்சாவூரில், திமுக அமைச்சர் திரு. சக்கரபாணியிடம் விவசாயிகள் நேரடியாக வாக்குவாதம் செய்தும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பொழுதுபோக்கிவிட்டு, யாரை ஏமாற்ற இந்தக் கடித நாடகம்?

திமுக அரசின் ஊழலாலும், தவறுகளாலும், தமிழக நெல் விவசாயிகள் துன்பப்பட வேண்டுமா? ஒவ்வொரு ஆண்டும், நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்கவும், உலர வைக்கவும் கிடங்குகள் இல்லாமல் அவதிப்படும் விவசாயிகளுக்கு நிரந்தரத் தீர்வு, பாதுகாப்பான கிடங்குகள் மட்டுமே தவிர, திமுகவின் கடித நாடகம் அல்ல. தமிழக விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருப்பதை, எப்போதுதான் நிறுத்தும் இந்த கையாலாகாத திமுக அரசு?” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : இந்த தடவை மிஸ்ஸே ஆகக் கூடாது..!செந்தில் பாலாஜிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த டார்கெட்!

RUPA

Next Post

“தனுஷ் உடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யணும்.. அப்ப தான்...” பிரபல தமிழ் சீரியல் நடிகை ஓபன் டாக்..!

Tue Nov 18 , 2025
.” தமிழ் சினிமா மட்டுமின்றி அனைத்து மொழி சினிமாத்துறையிலும் அட்ஜெஸ்மெண்ட் என்பது ஒரு முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது.. பல நடிகைகள் தங்களின் காஸ்டிங் கவுச் அனுபவங்கள் பற்றி பகிர்ந்து வருகின்றனர்.. அந்த வகையில் தமிழ் சீரியல் நடிகை ஒருவர் தனக்கு வந்த அட்ஜெஸ்ட்மெண்ட் அழைப்பு குறித்து ஓபனாக பேசி உள்ளார்.. வானத்தைப் போல, அன்னம், மருமகள் போன்ற சன் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் மான்யா ஆனந்த். சமீபத்தில் […]
dhanush serial actress

You May Like