தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதை முன்கூட்டியே தெரிவிக்க முடியாது. எனினும் விரைவில் அறிவிப்பேன் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி; மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றாமல் பெயர் மட்டும் வைத்து, திமுக விளம்பர ஆட்சி நடத்துகிறது. நல்ல திட்டங்களை செயல்படுத்த முதல்வருக்குத் தெரியவில்லை.திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது. கடந்த தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் பாதியளவு கூட நிறைவேற்றவில்லை. 13 சதவீதம் மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் திமுக அரசு தோல்வியடைந்து விட்டது.
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) என்பது புதிய திட்டம் கிடையாது. வாக்காளர் பட்டியலில் இறந்தவர் பெயர்கள் மற்றும் 2 இடங்களில் பெயர் உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து, அதை சரி செய்ய வேண்டும். போலி வாக்காளர்களை நீக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை சரியான முறையில் எடுக்க வேண்டும்.
நேர்மையாக வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.பாமக உட்கட்சிப் பிரச்சினைகள் 6 மாதங்களில் முடிவுக்கு வரும். தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதை முன்கூட்டியே தெரிவிக்க முடியாது. எனினும் விரைவில் அறிவிப்பேன்.



