ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசிக்கும் ஒரு குறிப்பிட்ட கிரகம் அதிபதியாக இருக்கும். அதேபோல், செல்வத்தின் கடவுளான குபேரருக்கு சில ராசிகள் மிகவும் பிடித்தமானவை என்று கூறப்படுகிறது. அந்த ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் பணப் பிரச்சனையின்றி வாழ்வார்கள் என கூறப்படுகிறது. அந்த வகையில், குபேரரின் சிறப்பு அருளைப் பெறும் அந்த ராசிகளைப் பற்றி இங்கே காணலாம்.
ரிஷபம்
சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு, குபேரரின் சிறப்பு அருள் உண்டு. இவர்களுக்கு செல்வம், புகழ் மற்றும் பெருமை எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆடம்பரமான வாழ்க்கை வாழும் இவர்கள், பணப் பற்றாக்குறையை ஒருபோதும் சந்திப்பதில்லை.
கடகம்
சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள், கூர்மையான புத்தியும், உறுதியான முடிவெடுக்கும் திறனும் கொண்டவர்கள். இவர்கள் குபேரருக்கு மிகவும் பிடித்தமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். பிறருக்கு உதவ வேண்டும் என்ற இவர்களின் குணம், குபேரருக்கு இவர்களை மேலும் பிடிக்கும். பணம் சேர்ப்பதில் வல்லவர்களான இவர்கள், எளிதில் பணக்காரர்களாக மாறுவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் அதிபதியும் சுக்கிரன்தான். லட்சுமி மற்றும் குபேரனின் சிறப்பு அருள் இந்த ராசிக்காரர்களுக்கு இயற்கையாகவே உண்டு. கடின உழைப்பு, புத்திசாலித்தனம் மற்றும் நேர்மையான குணம் ஆகியவை இவர்களின் வெற்றிக்கு வழிவகுக்கும். குபேரரின் அருளால், இவர்கள் வாழ்வில் அதிக வெற்றியைப் பெற்று, செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் குபேரருக்கு மிகவும் பிடித்தமானவர்களாக இருக்கிறார்கள். பல விஷயங்களில் அதிர்ஷ்டசாலிகளான இவர்கள், கடின உழைப்பால் எதையும் சாதிப்பார்கள். குபேரர் இவர்களைப் பணப் பற்றாக்குறையில் வைத்திருப்பதில்லை. இவர்களின் செல்வம் எப்போதும் நிரம்பி வழியும்.
தனுசு
குரு பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்கள், பிறப்பில் இருந்தே அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். குபேரரின் அருளால், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டம் இவர்களுக்குக் கிடைக்கும். இவர்கள் எளிதாகப் பணமும், புகழும் பெறுவார்கள்.
அதேபோல், வாழ்நாள் முழுவதும் செல்வ வளம் குறையாமல் இருக்க, “ஓம் ஹ்ரீம் க்ளீம் ஸ்ரீம் கும் குபேராய நரவாகனாய யக்ஷ ராஜாய தன தான்யாதிபதியே லக்ஷ்மி புத்ராய ஸ்ரீம் ஓம் குபேராய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் உச்சரிப்பது மிகவும் நன்மை பயக்கும்.
Read More : குட் நியூஸ்..! திருக்கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற நபர்களுக்கு கருணைத்தொகை…! தமிழக அரசு அனுமதி…!



