தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, ராமதாஸ் – சசிகலா அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பார்வேர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.. இந்த சூழலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது..
அதன்படி, என்.டி.ஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கபப்ட்டுள்ளது. என்.டி.ஏ கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்..
அமமுக வேட்பாளர்கள் யார் யார்?
சைதாப்பேட்டை – செந்தமிழன்
திருச்சி மேற்கு – ராஜசேகரன்
பெரியகுளம் – டாக்டர் கதிர்காமு
மடத்துக்குளம் – சண்முகவேலு
திருப்பத்தூர் – ஞானசேகரன்
காரைக்குடி – தேர்போகி பாண்டி
திருப்பத்தூர் – ஞானசேகரன்
நாங்குநேரி – இசக்கி முத்து
மன்னார்குடி – எஸ். காமராஜ்
திருவையாறு – கார்த்திகேயன்
பூந்தமல்லி (தனி) – ஏழுமலை
Read More : பிரச்சாரத்திற்கு யார் அனுமதி தருவார்கள் என்பதை விஜய் தெரிந்து கொள்ள வேண்டும்.. அமைச்சர் மா.சு. பதிலடி..!



