உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார்? வீரர்கள் கேட்ட கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்!

mks

விளையாட்டு துறையில் சாதனை புரிந்த வீரர்கள், வீராங்கனைகளுடன் கலந்துரையாடிய வீடியோவை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.. மேலும் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் “ அப்போது தன்னம்பிக்கை, ஒழுக்கத்தை கற்பிப்பது விளையாட்டு தான்.. அடுத்த தலைமுறையின் கனவுகளை தமிழக இளம் வீரர், வீராங்ககனைகள் தாங்கி செல்கின்றனர்.. வீரர்கள் விளையாட்டை மட்டும் விளையாடவில்லை.. நம் தமிழ்நாட்டின் Future Legacy-யை உருவாக்கி இருக்கிறார்கள்.


Champion-ஓட True Strength பதக்கங்கள்ல மட்டும் இல்ல, அவங்ககிட்ட இருக்குற Discipline, Pressure-ஐ handle பண்ணுற விதம், விடாமுயற்சி இது எல்லாத்துலயும்தான் இருக்கு! தமிழ்நாடு முழுக்க இருந்து வந்திருந்த நம்ம Young Athletes-கூட பேசினப்போ, அவங்களோட Clarity-ஐயும் Confidence-ஐயும் பார்த்து மிரண்டு போயிட்டேன். Next Level Focus! இவங்க வெறும் விளையாட்டை மட்டும் விளையாடல, நம்ம தமிழ்நாட்டோட Future Legacy-யை உருவாக்கிட்டு இருக்காங்க. இதனால்தான் நம்ம இளைஞர்கள் மேல எனக்கு எப்பவும் ஒரு தனி நம்பிக்கை உண்டு!” என்று தெரிவித்துள்ளார்..

அந்த வீடியோவில் வீரர்கள் வீராங்கனைகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.. பிடித்த விளையாட்டு என்ற கேள்விக்கு “ ஹாக்கி, கிரிக்கெட் என 2 விளையாட்டுகளும் எனக்கு மிகவும் பிடிக்கும்..” என்று முதல்வர் பதிலளித்தார்.. உங்களுக்கு பிடித்த விளையாட்டு வீரர்கள் யார் என்ற கேள்விக்கு கபில் தேவ், தோனி ஆகியோரை பிடிக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ சிறுபிள்ளையாக இருக்கும் போது கலைஞர் பேட்டிங் செய்ய நான் பந்துவீசி இருக்கிறேன்.. ” என்று கூறினார்..

கடந்த நான்கரை ஆண்டு திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது. விளையாட்டு துறையில் தமிழகம் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவே உதயநிதியை அமைச்சராக நியமித்தேன்..” என்று முதலமைச்சர் தெரிவித்தார்.. சிறுபிள்ளைகள் செல்போனில் நேரத்தை செலவிடுவதை விட்டுவிட்டு விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் முதல்வர் அறிவுரை வழங்கினார்..

Read More : 8வது ஊதியக் குழு : மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு… ஜனவரி 1, 2026 முதல் சம்பளம் எப்படி இருக்கும்?

RUPA

Next Post

உங்கள் வீட்டில் இந்த நான்கு பொருட்கள் இருந்தால், லட்சுமி தேவி உங்கள் வீட்டில் இருப்பதற்குச் சமம்! பணம் பெருகும்..!

Wed Dec 24 , 2025
ஒரு தனிநபரின் மற்றும் குடும்பத்தின் முன்னேற்றத்தில் வாஸ்து ஒரு சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் அனைவரும் வாஸ்து விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், சிலர் எவ்வளவு உழைத்தாலும், வீட்டில் பணம் சேர்வதில்லை, செல்வம் பெருகுவதில்லை. ஆனால், வீட்டில் செல்வம் பெருகி, மகாலட்சுமியின் அருள் கிடைக்க வேண்டுமென்றால், இந்த நான்கு பொருட்கள் உங்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். அவை என்னவென்று இப்போது பார்க்கலாம். […]
vasthu2 1 1

You May Like