ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தை பெருமையுடன் நினைவுக்கூறும் வகையில் இந்த தினம் கோலாகளமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 79வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தின விழாவில் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் கோடி ஏற்றி உரையாடவுள்ளார். அதே போல், பள்ளி, கல்லூரிகள் முதல் அரசு, தனியார் அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் கொடி ஏற்றப்பட்டு கொண்டாடப்படவுள்ளது.
கொடி என்பது நாட்டின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. அந்த வகையில், இந்தியாவின் தேசியக் கொடி வரலாறு மிக சுவாரஸ்மானது. 1906ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டு வரை இந்திய தேசியக் கொடியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. வரலாற்றில் ஒவ்வொரு தருணத்தில் வெவ்வேறு விதமான கொடிகள் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் கொடிக்கான வரலாறு என்பது 1906ஆம் ஆண்டு முதல் தொடங்கியுள்ளது. ஆனால் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு என்று ஒரு கொடி என்பது 1921ஆம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்டது. சுமார் 300 வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை வேண்டி இந்தியாவில் நடைபெற்ற சுதந்திர போராட்டத்திற்கு என்று ஒரு அடையாளம் தேவைப்பட்டது.
தேசியக் கொடியை வடிவமைத்தவர் :தேசிய உணர்வை தூண்டும், இந்திய சுதந்திரத்தில் அடையாளமாக விளங்கும் மூவர்ண கொடியை பிங்கை வெங்கையா என்பவர் வடிவமைத்தார். 1876ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் இன்றைய மச்சிலிப்பட்டினத்திற்கு அருகில் உள்ள பட்லபெனுமருவில் பிறந்தவர் இவர். ஒரு விவசாயியாகவும் புவியியலாளராகவும் திகழ்ந்தார். மேலும், இவர் ஆந்திர தேசிய கல்லுரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஜப்பானிய மொழியில் சரளமாக பேசுக்கூடியவர், எனவே இவரை ஐப்பான் வெங்கையா என்றும் அழைப்பர்.
பிங்கலி வெங்கையா, இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் ராணுவத்தில் சிப்பாயாக பணியாற்றினார். அப்போது போரில் கலந்துகொள்ளுவதற்காக தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்பப்பட்டார். அப்போது அங்கு யூனியன் ஜாக் பிரிட்டிஷ் வீரர்களை பார்த்து அவருக்கு தேசிய உணர்வு உண்டானது. அதனைத்தொடர்ந்து, இந்தியா திரும்பிய அவர் சுதந்திர போராட்டங்களில் ஈடுப்பட்டார். அப்போதுதான் சுதந்திர போராட்டத்திற்கு தேசியக் கொடி ஒன்று அவசியமாக உள்ளது என உணர்ந்து அதற்காக பணிகளில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, தேசியக் கொடியின் பல மாதிரிகளை வடிவமைத்தார். 1921ஆம் ஆண்டு விஜயவாடாவில் நடத்த இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் மகாத்மா காந்தியிடம் இவரின் வடிவமைப்புகளை காட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒரு வடிவமைப்பிற்கு காந்தி ஒப்புதல் அளித்தார். அப்போது, காந்தியிடம் காட்டிய கொடியில் சிவப்பு மற்றும் பச்சை ஆகிய இரண்டு கோடிகள் மட்டுமே இருந்தது, நடுவில் காந்திய காதர் ராட்டை சக்கரம் இடம்பெற்று இருந்தது.
பிங்கலி வெங்கையாவின் கொடிக்கு ஒப்புதல் அளித்த காந்தி, கொடியில் வெள்ளை நிறத்தை சேர்க்க ஆலோசனை வழங்கினார். அதன் அடிப்படையில் கூடுதலாக வெள்ளை நிறம் சேர்க்கப்பட்டது. அப்போது இருந்து இந்தியாவிற்கான கொடி மூவர்ணக் கொடியாக மாறியது.
1921ஆம் ஆண்டு முதல் அனைத்து காங்கிரஸ் கூட்டங்களிலும் பிங்கலி வெங்கையா வடிவமைத்த கொடி பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், 1931ஆம் ஆண்டுதான் இந்த மூவர்ணக் கொடியை அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து, 1947ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் கொடியாக மூவர்ணக் கொடியின் மையம் அசோக சக்கரமாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவிற்கான தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையா 1963ஆம் ஆண்டு மறதியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரை கெளரவிக்கும் வகையில், 2009ஆம் ஆண்டு அரசின் சார்பில் தபால் தலை வெளியிடப்பட்டது. 2014ஆம் ஆண்டு அகில இந்திய வானொலியின் விஜயவாடா நிலையத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.
இந்திய மண்ணில் முதல்முறையாக எங்கு ஏற்றப்பட்டது? ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை வேண்டி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது. அதில் கொடி சுதந்திர உணர்வை தூண்டக்கூடியதாகவும், ஆங்கிலேயர்கள் எதிர்த்து சுதந்திரம் நாடுகிறோம் என்பதை உரக்க சொல்லும் செயலாகவும் கொடி ஏற்றுவது இருந்தது. அந்த வகையில் இந்திய கொடியை முதலில் யார் ஏற்றினார், எங்கு ஏற்றப்பட்டது என கேள்வி கண்டிப்பாக பல பேருக்கு இருக்கும். முதல் தேசியக் கொடி என்பது 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி கொல்கத்தாவில் ஏற்றப்பட்ட கொடி என்று கூறப்படுகிறது.
ஆனால், தற்போதைய கொடி போல் இல்லாமல் இது சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய வண்ணங்கள் மற்றும் தாமரை, அரை நிலா போன்ற சின்னங்களை கொண்டிருந்தது. இந்த கொடிக்கான முறையான அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. அதனைத்தொடர்ந்து, 1929 ஆம் ஆண்டு நடத்திய கூட்டத்தில் டிசம்பர் 31 ஆம் தேதி லாகூரில் உள்ள ராவி நதிக்கரையில் ஜவஹர்லால் நேரு ஒரு கொடி ஏற்றார்.
மூவர்ண கொடி வடிவைக்கப்பட்ட பின்னர் இந்திய மண்ணில் முதன்முறையாக கொடி ஏற்றியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆவார். இந்தியாவிற்கு வெகு தூரத்தில் உள்ள போர்ட் பிளேயரில் தான் முதன்முறையாக ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்தற்கு அடையாளமாக மூவர்ண கொடி ஏற்றப்பட்டது. 1943ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அந்த இடத்தில் கொடி ஏற்றினார்.
போர்ட் பிளேயரை ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்து விடுப்பதாக கூறி சுபாஷ் சந்திர போஸ் கொடியேற்றிய செயல் அரசியல் அத்துமீறலாக பார்க்கப்பட்டது. தற்போது அந்த இடம் நினைவு சின்னமாக மாற்றப்பட்டுள்ளது. தேசியக் கொடி ஏற்றப்பட்ட கொடி கம்பத்தின் அருகில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சுதந்திரத்திற்காக போராடி உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவு சிலைகள் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
2018ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை கவுரவப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கூட்டத்தின் ராஸ் தீவின் பெயரை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு என்றும், நீல் தீவை ஷாஹீத் தீவு என்றும், ஹேவ்லாக் தீவை ஸ்வராஜ் தீவு என்றும் பெயர் மாற்றினார்.
Readmore: Independence Day 2025| இந்தியாவுடன் இணைந்து இன்று சுதந்திர தினம் கொண்டாடும் நாடுகள் எவை தெரியுமா?