கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே உள்ள வீரமார்த்தண்டன்புதூரை சேர்ந்த சுரேஷ் (41), நாகர்கோவிலில் இயங்கி வரும் ஒரு பிரபல இருசக்கர வாகன ஷோரூமில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி அனுஷா ஜாஸ்மின் (33), தனியார் பல் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார். காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களுக்கு வாழ்க்கையில், கடந்த சில காலமாக கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது. சுரேஷ் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டதால், அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. தொடர்ச்சியான மன உளைச்சலால் அனுஷா, கணவரை விட்டு விலகி இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாடகை வீட்டில் குடிபெயர்ந்து வசித்து வந்தார்.
ஒரு வாரத்திற்கு முன்னர், சுரேஷ் தன்னை திருத்திக்கொண்டதாக கூறி மனைவியிடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. “இனிமேல் சண்டை வாக்குவாதம் இருக்காது. உணவு மட்டும் சமைத்துத் தா, ஒன்றாக வாழலாம்” என கூறியதும், மீண்டும் இணைந்து வாழ அனுஷா சம்மதித்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று, மனைவியை தொடர்புகொள்ள முயன்றார் சுரேஷ். அப்போது போன் பிசியாக இருந்ததால் சந்தேகமடைந்தார். உடனடியாக வீட்டிற்கு வந்து, “யாருடன் பேசினாய்?” என்ற கோபத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது சில நிமிடங்களில் கடுமையான தகராறாக மாறியது. இதனால், ஆத்திரத்தில் கிச்சனில் இருந்த கத்தியை எடுத்து, மனைவியின் கழுத்தை அழுத்துள்ளார்.
இதில் அவர், தரையில் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த பக்கத்து வீட்டார், அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சம்பவம் தொடர்பாக அனுஷா அளித்த புகாரின் பேரில், கணவர் சுரேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : எந்த உணவுகளை சாப்பிட்டால் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும்..? கிரில் சிக்கனில் இப்படி ஒரு ஆபத்தா..?