ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது யார் என்பது பற்றி சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த சில மாதங்களாகவே பாமக நிறுனரான ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே அதிகார போட்டியானது ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் புதுச்சேரியில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மோதல் வெளியே வந்தது. இதனையடுத்து பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், தான் தான் பாமகவின் தலைவர் என அறிவித்தார். தேர்தல் ஆணையத்திலும் கடிதம் கொடுத்தார். ஆனால் அன்புமணியோ பாமக தலைவராக தான் நீடிப்பதாகவும் பொதுக்குழுவால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து தொண்டர்களை சந்திக்கும் வகையில் அன்புமணி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை அறிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராமதாசும் மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து பங்கேற்று வருகிறார். அந்த வகையில் இரு தரப்பிற்கும் இடையே மோதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், ராமதாஸ் தைலாபுரம் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் இதுகுறித்து கூறுகையில், “லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒட்டு கேட்கும் கருவி எனது வீட்டில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது. எனது வீட்டிலேயே, நான் உட்காரும் இடத்தில், எனது நாற்காலியின் பக்கத்தில் ஒட்டு கேட்கும் கருவி இருக்கிறது. யார் வைத்தார்கள், எதற்காக வைத்தார்கள் என்பது பற்றி ஆராய்ச்சி பண்ணி கொண்டு இருக்கிறோம்” என்றார்.
இந்த நிலையில் ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது யார் என்பது பற்றி சில தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக ராமதாஸ் தரப்பில் புகாரளிக்கப்பட்டதால் உயர் காவல் அதிகாரிகள் இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஆலோசித்துள்ளார்களாம். அப்போது உள்ளூர் போலீசார் விசாரணையில் அன்புமணி தரப்பினர் தான் ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது தெரியவந்துள்ளதாக போலீசார் ஸ்டாலினிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Read more: கரூர் தான் நம்பர்-1.. இரவோடு இரவாக கட்சி மாறிய அதிமுக, பாஜகவினர்..!! செந்தில் பாலாஜி பலே ப்ளான்