நம் நாட்டில் ஆன்லைன் ஷாப்பிங் வேகமாக வளர்ந்து வருகிறது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களை பயன்படுத்தும் மக்கள் தினமும் அதிகரித்து வருவதால், அந்த நிறுவனங்களின் வணிகமும் செழித்து வருகிறது. மக்கள் வீட்டிலிருந்தபடியே தேவையான பொருட்களை ஆர்டர் செய்ய முடிகிறதால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும், டெலிவரி பாய்களாக வேலை செய்யும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பல குடும்பங்கள் இந்த வேலையை நம்பியே வாழ்கின்றன.
வேலைக்கு சேர்வது எப்படி? டெலிவரி பாயாக வேலை செய்ய விரும்புவோர் முதலில் தங்களது நகரத்தில் உள்ள நிறுவன அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்காக ஆதார் அட்டை, சான்றிதழ்கள் போன்ற ஆவணங்கள் தேவைப்படும். சரிபார்ப்பு முடிந்த பிறகு, தேர்வானவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியின் போது எந்தப் பகுதிக்கு பார்சல் டெலிவரி செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கப்படும். GPS, Google Maps பயன்பாடு கற்பிக்கப்படும். பார்சல்களை சேதமின்றி பாதுகாப்பாக எவ்வாறு டெலிவரி செய்வது என்பதையும், வாடிக்கையாளர்களிடம் எவ்வாறு பேச வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்கப்படும்.
டெலிவரி பாய்களின் சம்பளம்: சம்பளம், பார்சல்களின் எண்ணிக்கை அடிப்படையில் மாறுபடும். பொதுவாக, ஒரு டெலிவரி பாய் ஒரு நாளில் 80 முதல் 100 பார்சல்களை டெலிவரி செய்கிறார். ஒவ்வொரு பார்சலுக்கும் ₹12 முதல் ₹14 வரை கமிஷன் கிடைக்கிறது. உதாரணமாக, 80 பார்சல்கள் டெலிவரி செய்தால், ஒருவருக்கு ஒரு நாளுக்கு ₹1000 வரை சம்பளம் கிடைக்கும். மாத வருமானம், அவர் டெலிவரி செய்யும் பார்சல்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே இருக்கும்.
பொருள் தொலைந்து போனால் யார் பொறுப்பு..? டெலிவரி செய்யும் பொருள் சேதமடைந்தால் அல்லது காணாமல் போனால், அதற்கான செலவை டெலிவரி பாயே ஏற்க வேண்டும். ஆனால், பொருள் ஏற்கனவே சேதமடைந்திருந்தால், டெலிவரி பாய் அதை முன்கூட்டியே சரிபார்த்து ஏற்காமல் இருக்கலாம்.
சலுகைகள்: சம்பளத்துடன் கூடுதலாக, சில நிறுவனங்கள் விபத்து காப்பீடு, சலுகைகள் போன்றவற்றை வழங்குகின்றன. இது நிறுவனத்தின் கொள்கையைப் பொறுத்து மாறுபடும்.
பிளிப்கார்ட் vs அமேசான்: இரண்டு நிறுவனங்களும் சம்பள கொள்கையில் தங்கள் சொந்த விதிமுறைகளை பின்பற்றுகின்றன. சில இடங்களில் கமிஷன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது; சில இடங்களில் தொகுப்பு அடிப்படையிலும் இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட மாத சம்பளம் இல்லை. எனவே, இரண்டு நிறுவனங்களிலும் வசதிகள், சம்பள அளவு மாறுபடலாம். ஆனால் இரண்டும் நம்பகமான தளங்களாக கருதப்படுகின்றன.
Read more: இந்த படிப்புகளை இனி, ஆன்லைன், தொலைதூர முறையில் படிக்க முடியாது.. தடை விதித்த UGC ! என்ன காரணம்?



