பொதுவாக அதிகாலை நடைப்பயணம் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. எனினும், குளிர்காலத்தில் நிலவும் அதீத குளிர்ச்சியான சூழல் காரணமாக, குறிப்பிட்ட உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் அதிகாலையில் வாக்கிங் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த் தவிர்க்க முடியாத பழக்கத்தை தொடர்ந்தால், அது ஆரோக்கியக் குறைபாடுகளை மேலும் தீவிரப்படுத்த வாய்ப்புள்ளது.
தவிர்க்க வேண்டியவர்கள் யார்..?
குளிர்காலத்தில் காலை நேர நடைப்பயணத்தை தவிர்க்க வேண்டிய முக்கியமான நபர்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை : குளிர்காலத்தில் உடல் இயற்கையாகவே குளிர்ச்சியாக இருப்பதால், நரம்பு மண்டலத்தின் செயல்பாடு அதிகரிக்கிறது. இது ரத்த அழுத்தத்தை உயர்த்தும். இதனால் இதயம் அதிக வேகமாக துடிக்க ஆரம்பிக்கும். எனவே, உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை உள்ளவர்கள் காலை நேர நடைப்பயணத்தை தவிர்ப்பது நல்லது.
இதய நோயாளிகள் : குளிர்ந்த வெப்பநிலை காரணமாக, ரத்த நாளங்கள் சுருங்கத் தொடங்கும். இதனால் உடல் முழுவதும் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதயத்திற்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவும் குறைவதால், இதயம் வழக்கத்தைவிட அதிகமாக வேலை செய்ய நேரிடும். இது மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கக் கூடும்.
மூட்டு வலி அல்லது முழங்கால் வலி : குளிர்காலத்தில் மூட்டுகள் விறைப்பாக இருக்கும். மேலும், முழங்கால் மற்றும் மூட்டுகளில் உள்ள இரத்த நாளங்கள் சுருங்குவதால் வலி கடுமையாகும். எனவே, மூட்டு வலி உள்ளவர்கள் இந்த நேரத்தில் அதிகாலையில் வாக்கிங் செல்வதை தவிர்த்துவிட வேண்டும்.
ஆஸ்துமா நோயாளிகள் : ஆஸ்துமா உள்ளவர்கள் குளிர்ச்சியான சூழலில் சுவாசிப்பதற்கு சிரமமாக உணர்வார்கள். குளிர்ந்த வெப்பநிலையில் வியர்வை குறைவாக வெளியேறுவதால், உடலில் அதிகப்படியான நீர் சேர்ந்து நுரையீரலுக்கு சிரமத்தை கொடுக்கும்.
சளி, இருமல் அல்லது காய்ச்சல் : சளி அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் அதிகாலையில் வாக்கிங் செல்வதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில், குளிரான காற்றை சுவாசிப்பதால் அவர்களின் உடல்நலப் பிரச்சனை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பாதுகாப்பான நடைபயணம் :
* மேலே குறிப்பிட்டுள்ள உடல்நல குறைபாடுகள் உள்ளவர்கள் குளிர்காலத்தில் வாக்கிங் செல்ல விரும்பினால், சில பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:
* சூரியன் உதித்த பிறகு, வெப்பநிலை சற்று உயர்ந்த பின்னர் வாக்கிங் செல்வது சிறந்தது.
* உடலை முழுவதுமாக மூடக்கூடிய, இதமாக வைத்திருக்கும் ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும். காதுகளை மறைக்கும்படி ஆடை அணிவது மிக அவசியம்.
காலையில் எழுந்தவுடன் உடனடியாக வெளியே செல்லாமல், சிறிது நேரம் வீட்டில் இருந்து உடலுக்குப் பயிற்சி கொடுக்க தொடங்கலாம். வாக்கிங் செல்வதற்கு முன் லேசான உடற்பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சிகள் செய்வது உடலை தயார்படுத்தும்.
Read More : கார்த்திகை மாதத்தின் மகத்துவம் பற்றி தெரியுமா..? இப்படி விரதம் இருந்தால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா..?



