சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்டில் பணம் திருடி போய் அழுது கொண்டிருந்த சீதாவை ஆறுதல் கூறி ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து வருகிறாள் மீனா. அங்கு சீதாவை அவளை வேலையை விட்டு தூக்குவதாக கூறிய மேனஜர் காணாமல் போன பணத்துக்கு நீதான் பொறுப்பு எனவும் சொல்கிறார். உடனே மீனா, ரவுடிகள் பண்ண தப்புக்கு சீதா என்ன பண்ணுவா. அவள வேலையில் இருந்து தூக்கி விடாதீங்க என கெஞ்சுகிறாள். அப்போது ஆட்டோக்காரரும் நடந்தை சொல்கிறார். ஆனால் மேனேஜர் அதை நம்பவில்லை.
இதனால் சீதா மனமுடைந்து அங்கிருந்து கிழம்புகிறாள். இதனையடுத்து மீனா வீட்டுக்கு வந்து இந்த விஷயத்தை முத்துவிடம் சொல்கிறாள். வீட்டில் இருக்கும் அனைவரும் இந்த விஷயத்தை தெரிந்துக்கொண்ட பின்பு, அண்ணாமலை அதிர்ச்சி அடைகிறார். அப்போது விஜயா, மனோஜ் இருவரும் ஒன்று சேர்ந்து வழக்கம் போல சீதாவை பற்றி தவறாக பேச ஆரம்பிக்கின்றனர்.
உடனே டென்ஷனான முத்து, அப்பா பணத்தை மொத்தமா திருட்டிட்டு போனவன் தன நீ என மனோஜை திட்டுகிறான். இதனைக்கேட்டு ரோகிணி, எதுக்கு முத்து தேவையில்லாமல் பேசுறீங்க என கூறுகிறாள். அப்போது மீனா, சீதாவோட போன ஆட்டோ டிரைவர் கூட அவள்மேல எந்த தப்பும் இல்லைன்னு சொன்னாரு. அவளுக்காக அழுகவும் செய்தாரு என்கிறாள்.
இதனால் அந்த ஆட்டோ டிரைவர் மீது முத்துவுக்கு சந்தேகம் வருகிறது. இதனையடுத்து செல்வத்தை அழைத்துக்கொண்டு ஆட்டோ டிரைவர் வீட்டுக்கு போகிறான் முத்து. அப்போது அங்கு பைனான்ஸ் கம்பெனியில் இருந்து கடனை வசூலிக்க ஆட்கள் வருகின்றனர். அப்போது அந்த ஆட்டோ டிரைவர் ஐந்து லட்சம் பணத்தை கொண்டு வருகிறார். முத்து அவரை பிடித்து விசாரிக்க, கடன் அடைக்க பணத்தை திருடியது ஒப்புக்கொள்கிறான். இதனையடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Read more: அணு ஆயுதப் போரை விடுங்க.. அமெரிக்காவின் கொட்டத்தை அடக்க சீனா கையில் எடுத்திருக்கும் கொடிய ஆயுதம்..



