தாதாசாகேப் பால்கே விருதை முதலில் வென்றவர் யார்?. இந்திய சினிமாவின் முதல் ஹீரோயின்!. 1969 -2023 வரை விருது பெற்றவர்களின் பட்டியல் இதோ!.

Dadasaheb Phalke Awards

இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதுக்கு மோகன்லால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தாதாசாகேப் பால்கேவின் நினைவாக நிறுவப்பட்டது. நடிகை தேவிகா ராணி 1969 ஆம் ஆண்டு இந்த விருதைப் பெற்ற முதல் நபர் ஆவார்.


மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் 2023 ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருதைப் பெறுவார். செப்டம்பர் 23, 2025 அன்று நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படும். இது இந்தியாவில் திரைப்பட ஆளுமைகளுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமாகும். இது தாதாசாகேப் பால்கேவின் நினைவாக நிறுவப்பட்டது. நடிகை தேவிகா ராணி 1969 ஆம் ஆண்டு இந்த விருதைப் பெற்ற முதல் நபர் ஆவார்.

இதுவரை தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்றவர் யார்?

1969 – இந்திய சினிமாவின் முதல் ஹீரோயின் தேவிகா ராணி, (இந்தி)

1970- தயாரிப்பாளர் பிரேந்திரநாத் சிர்கார் (வங்காளம்)

1971- நடிகர் பிரித்விராஜ் கபூர் (மறைவிற்குப் பின்னர்) (இந்தி)

1972- இசையமைப்பாளர் பங்கஜ் மாலிக், (வங்காளம், இந்தி)

1973 – நடிகை சுலோச்சனா (ரூபி மையர்ஸ்), இந்தி

1974 – இயக்குநர் பி. என். ரெட்டி தெலுங்கு

1975 – இயக்குநரும், நடிகருமான தீரேந்திர நாத் கங்குலி (வங்காளம்)

1976 – நடிகை கனன் தேவி (வங்காளம்)

1977 – நிதின் போஸ் – படத்தொகுப்பாளர், இயக்குநர், திரைக் கதையாசிரியர் (வங்காளம் மற்றும் இந்தி)

1978 – இராய் சந்த் போரல் – இசையமைப்பாளர், இயக்குநர் (வங்காளம் மற்றும் இந்தி)

1979 – சோரப் மோடி – நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இந்தி)

1980 – பைடி ஜெய்ராஜ் – நடிகர், இயக்குநர் (இந்தி)

1981 – நௌசாத் – இசையமைப்பாளர் (இந்தி)

1982 – எல். வி.பிரசாத் – நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி)

1983 – துர்கா கோட் – நடிகை (இந்தி மற்றும் மராத்தி)

1984 – சத்யஜித் ராய் – இயக்குநர் (இந்தி)

1985 – வி. சாந்தாராம் – இசையமைப்பாளர், இயக்குநர் (வி. சாந்தாராம்)

1986 – பி. நாகி ரெட்டி – தயாரிப்பாளர் (தெலுங்கு)

1987 – ராஜ் கபூர் நடிகர் – இயக்குநர் (இந்தி)

1988 – அசோக் குமார் – நடிகர் (இந்தி)

1989 – லதா மங்கேஷ்கர், பின்னணிப் பாடகி, (இந்தி மற்றும் மராத்தி)

1990 – அக்கினேனி நாகேஸ்வர ராவ் – நடிகர் (தெலுங்கு)

1991 – பால்ஜி பெந்தர்கர் – இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் (மராத்தி)

1992 – பூபேன் அசாரிகா – இயக்குநர் (அசாமி)

1993 – மஜ்ரூ சுல்தான்புரி – பாடலாசிரியர் (இந்தி)

1994 – திலிப் குமார் – நடிகர் (இந்தி)

1995 – ராஜ்குமார் (இளவரசன்)- நடிகர், பின்னணிப் பாடகர் (கன்னடம்)

1996 – சிவாஜி கணேசன் – நடிகர் (தமிழ்)

1997 – கவிஞர் பிரதீப், பாடலாசிரியர் (இந்தி)

1998 – பி. ஆர். சோப்ரா – இயக்குநர், தயாரிப்பாளர் (இந்தி)

1999 – ரிஷிகேஷ் முகர்ஜி – இயக்குநர் (இந்தி)

2000 – ஆஷா போஸ்லே – பின்னணிப் பாடகி (இந்தி மற்றும் மராத்தி)

2001 – யஷ் சோப்ரா – இயக்குநர், தயாரிப்பாளர் (இந்தி)

2002 – தேவ் ஆனந்த் – நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இந்தி)

2003 – மிருணாள் சென் – இயக்குநர் (வங்காளம் மற்றும் இந்தி)

2004 – அடூர் கோபாலகிருஷ்ணன் – இயக்குநர் (மலையாளம்)

2005 – சியாம் பெனகல் – இயக்குநர் (இந்தி)

2006 – தபன் சின்கா – இயக்குநர் (வங்காளம் மற்றும் இந்தி)

2007 – மன்னா டே – பின்னணிப் பாடகர் (வங்காளம் மற்றும் இந்தி)

2008 – வி.கே. மூர்த்தி – படத்தொகுப்பாளர் (இந்தி)

2009 – டி. ராமா நாயுடு – தயாரிப்பாளர், இயக்குநர் (தெலுங்கு)

2010 – கைலாசம் பாலச்சந்தர் – இயக்குநர் (தமிழ்)

2011 – சௌமித்திர சாட்டர்ஜி – நடிகர் (வங்காளம்)

2012 – பிரான் கிரிஷன் சிகந்த் – நடிகர் (இந்தி)

2013 – குல்சார் – பாடலாசிரியர் (இந்தி)

2014 – சசி கபூர்- இந்தி

2015 – மனோஜ் குமார் – இந்தி

2016 – கே. விஸ்வநாத் – இயக்குநர் (தெலுங்கு)

2017 – வினோத் கண்ணா – நடிகர் (இந்தி)

2018 – அமிதாப் பச்சன் – நடிகர் (இந்தி)

2019 – ரஜினிகாந்த் – நடிகர் (தமிழ்)

2020 – ஆஷா பரேக் – இந்தி

2021 – வஹீதா ரெஹ்மான் – இந்தி

2022- மிதுன் சக்ரவர்த்தி – வங்காளம் மற்றும் இந்தி

2023 – மோகன்லால் (மலையாளம்)

Readmore: அடேங்கப்பா!. 40 ஆண்டுகள் திரை சகாப்தம்!. 350க்கும் அதிகமான படங்கள்!. தாதாசாகேப் பால்கே விருது பெறும் மோகன்லாலின் சினிமா வாழ்க்கை!

KOKILA

Next Post

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்..!! வந்தாச்சு லேட்டஸ்ட் அப்டேட்..!! லட்சங்களில் வருமானம் கொட்டும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Sun Sep 21 , 2025
நமது நாட்டின் எதிர்காலத் தூண்களான பெண் குழந்தைகளின் வாழ்வுக்கு நிதிப் பாதுகாப்பு அளிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கனவு. அந்தக் கனவை நனவாக்க உதவும் திட்டங்களில் ஒன்றுதான் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் (சுகன்யா சம்ரித்தி யோஜனா). இந்த திட்டம் ஒரு சாதாரண சேமிப்புத் திட்டமாக மட்டுமின்றி, ஒரு பெண் குழந்தையின் கல்வி, திருமணம், மருத்துவ தேவைகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. இத்திட்டத்தை தபால் நிலையங்களில் தொடங்கலாம். பிரதமர் மோடியால் கடந்த […]
Selva Magal 2025

You May Like