வரலாற்றில் போர் என்பது எப்போதும் நிலத்திற்காகவோ அல்லது அதிகாரத்திற்காகவோ மட்டுமே நடத்தப்பட்டதில்லை. பெரும்பாலும், அவை ஆழமான செய்தியை அனுப்பவும் பயன்படுத்தப்பட்டன.. பயம், அடிபணிதல் மற்றும் முழுமையான அதிகாரம் போன்ற செய்திகளை வழங்க, போரில் வெற்றி பெற்றவர்கள் சில நேரங்களில் கொல்லப்பட்ட தங்கள் எதிரிகளின் மண்டை ஓடுகளைப் பயன்படுத்தி கோபுரங்களைக் கட்டி உள்ளனர்.. இந்த கொடூரமான பாரம்பரியம் இந்தியா அல்லது ஆசியாவில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் காணப்பட்டது. வரலாற்றின் இந்த இருண்ட அத்தியாயம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
தைமூர்
இடைக்கால வரலாற்றில், தைமூர் மிகவும் கொடூரமான ஆட்சியாளர்களில் ஒருவராக இருந்தவர் தைமூர். 14 ஆம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவிலிருந்து எழுந்த தைமூர், இந்தியா உட்பட பல நாடுகளை அழிவின் பாதையை விட்டுச் சென்றார். 1398 ஆம் ஆண்டில், அவர் டெல்லியை ஆக்கிரமித்தபோது, அவரது படைகள் நகரம் முழுவதும் பயங்கரமான கொடூரங்களை கட்டவிழ்த்துவிட்டன..
தைமூர் டெல்லியில் கிட்டத்தட்ட 1 லட்சம் பேரை கொல்ல உத்தரவிட்டார் என்றும், அவர்களின் துண்டிக்கப்பட்ட தலைகளைப் பயன்படுத்தி கோபுரங்களைக் கட்டினார் என்றும் கூறப்படுகிறது… இந்த நிகழ்வுகள் தைமூரின் சுயசரிதையான துஸ்க்-இ-தைமூரி மற்றும் தாரிக்-இ-ஃபிரூஸ் ஷாஹி ஆகிய புத்தகங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
பாபர்
முகலாயப் பேரரசின் நிறுவனர் பாபர், 1526 ஆம் ஆண்டு முதல் பானிபட் போரில் வெற்றி பெற்ற பிறகு, ஆயிரக்கணக்கான இப்ராஹிம் லோடியின் வீரர்களைக் கொல்ல உத்தரவிட்டார், மேலும் அவர்களின் மண்டை ஓடுகளால் கோபுரங்களைக் கட்டினார். இது அவரது சுயசரிதை பாபர்நாமாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.. பாபர் தனது எதிரிகளுக்கு ஒரு கடுமையான முன்மாதிரியாக இருக்க அவ்வாறு செய்ததாகக் அதில் கூறப்பட்டுள்ளது..
ஔரங்கசீப்
ஔரங்கசீப்பின் பெயர் பெரும்பாலும் இதுபோன்ற கதைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது, ஆனால் வரலாற்று சான்றுகள் இந்தக் கூற்றுக்களை ஆதரிக்கவில்லை. வரலாற்றாசிரியர் சதீஷ் சந்திரா, தனது Medieval India: From Sultanat to the Mughals (தொகுதி II) என்ற புத்தகத்தில், ஔரங்கசீப்பின் கடுமையான மதக் கொள்கைகள் மற்றும் இராணுவப் பிரச்சாரங்களை விவரிக்கிறார், ஆனால் மண்டை ஓடு கோபுரங்களைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
விளாட் தி இம்பேலர்
15 ஆம் நூற்றாண்டின் வால்லாச்சியாவில் (நவீனகால ருமேனியா), விளாட் தி இம்பேலர் அல்லது டிராகுலா என்று அழைக்கப்படும் விளாட் III, தனது கொடூரமான தண்டனைகளுக்காகப் புகழ் பெற்றவர்… அவர் தனது எதிரிகளைக் கொல்லவில்லை.. ஆனால் அவர்களின் சடலங்களை கம்பங்களில் ஏற்றி, அவர்களின் மண்டை ஓடுகளைக் காட்டி “இம்பேலிமென்ட் காடு” என்ற இடத்தை உருவாக்கினார்.
1462 ஆம் ஆண்டில், விளாட் துருக்கிய இராணுவத்திலிருந்து ஆயிரக்கணக்கான வீரர்களைக் கைப்பற்றி படுகொலை செய்தார். பின்னர் அவர் அவர்களின் உடல்களை நீண்ட மர கூர்முனைகளில் ஏற்றி, அந்தப் பகுதியை சடலங்களின் காடாக மாற்றினார். வரலாற்றாசிரியர்களான ராடு ஃப்ளோரெஸ்கு மற்றும் ரேமண்ட் மெக்னாலி ஆகியோர் தங்கள் புகழ்பெற்ற புத்தகமான இன் சர்ச் ஆஃப் டிராகுலாவில் இந்தக் கொடூரத்தை ஆவணப்படுத்தினர்.
செங்கிஸ் கான்
மங்கோலிய பேரரசர் செங்கிஸ் கான் அரங்கேற்றிய கொடூரமான சம்பவங்களில் ஒன்று நிஷாபூரில் நடந்த படுகொலை ஆகும். அங்கு அவரது படைகள் ஆயிரக்கணக்கான மக்களை கொன்றதாகவும், அவர்களின் மண்டை ஓடுகளால் கோபுரங்களைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது. கி.பி 1221 இல், மங்கோலியர்கள் கொராசன் பிராந்தியத்தில் ஒரு முக்கிய கலாச்சார மற்றும் வணிக மையமான நிஷாபூரை (இன்றைய ஈரான்) ஆக்கிரமித்தனர்.
வரலாற்றாசிரியர் ஜாக் வெதர்ஃபோர்ட், செங்கிஸ் கான் அண்ட் தி மேக்கிங் ஆஃப் தி மாடர்ன் வேர்ல்ட் (2004) புத்தகத்தில் இதுகுறித்து குறிப்பிட்டுள்ளார்: ” செங்கிஸ் கான் நிஷாபூரின் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை முற்றிலுமாக அழிக்க உத்தரவிட்டார். நகரம் அழிக்கப்பட்டது, கொல்லப்பட்டவர்களின் மண்டை ஓடுகள் உயர்ந்த மேடுகளைக் கட்டப் பயன்படுத்தப்பட்டன.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மங்கோலிய வரலாற்றாசிரியர் அடா-மாலிக் ஜுவாய்னி, கிட்டத்தட்ட 1.7 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்துகிறார், இருப்பினும் நவீன வரலாற்றாசிரியர்கள் இந்த எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.. ஆனாலும் இந்த படுகொலையில் லட்சக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டதாக அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
ஓட்டோமான்
1809 ஆம் ஆண்டு முதல் செர்பிய எழுச்சியின் போது, ஒட்டோமான் பேரரசுக்கு எதிராக செர்பிய கிளர்ச்சியாளர்கள் எழுந்தபோது, துருக்கிய இராணுவம் கொடூரமான தாக்குதல் நடத்தியது. கிளர்ச்சியை அடக்கிய பிறகு, வீழ்ந்த 952 செர்பிய போராளிகளின் மண்டை ஓடுகளைப் பயன்படுத்தி அவர்கள் ஒரு கோபுரத்தைக் கட்டினார்கள்.
“மண்டை ஓடு கோபுரம்” என்று அழைக்கப்படும் இந்த கட்டிடட், ஒரு கொடூரமான நினைவூட்டலாக பெல்கிரேடுக்கு அருகில் இன்னும் உள்ளது. பெல்கிரேட் வரலாற்று அருங்காட்சியகம் இந்த அத்தியாயத்தை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் இந்த கோபுரம் ஒரு வரலாற்று நினைவுச்சின்னமாக பாதுகாக்கப்படுகிறது.
எதிரிகளின் மண்டை ஓடுகளை வைத்து கோபுரம் கட்டுவது என்பது மத்திய ஆசியா, ஐரோப்பா மற்றும் ஒட்டோமான் பேரரசு முழுவதும் காணப்படும் ஒரு பிரபலமான உளவியல் போர் முறையாகும் என்பது தெளிவாகிறது. இந்திய துணைக் கண்டத்தில், தைமூர் மற்றும் பாபர் ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற செயல்கள் வரலாற்று ரீதியாக சரிபார்க்கப்பட்டுள்ளன.
செர்பியாவின் மண்டை ஓடு கோபுரம் ஒரு வரலாற்று அமைப்பாக மட்டுமல்லாமல், போரின் கொடூரங்களை நமக்கு நினைவூட்டும் ஒரு சக்திவாய்ந்த நினைவுச்சின்னமாகவும் நிற்கிறது. மனித மண்டை ஓடுகளுடன் கோபுரங்களைக் கட்டுவது சந்தேகத்திற்கு இடமின்றி மனித வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகும்.. அது தைமூராக இருந்தாலும் சரி அல்லது செங்கிஸ் கான், ஒட்டோமானால் கட்டப்பட்டதாக இருந்தாலும் சரி.. இந்த ஆட்சியாளர்கள் போரின் போது மனித ஒழுக்கத்தின் எல்லைகளை மீறினர் என்பதே மறுக்க முடியாத உண்மை..
Read More : சூரியப் பெயர்ச்சி.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு பொற்காலம்.. பணம் கொட்டப்போகுது.. லாபம், வெற்றி தான்!