2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் தமிழில் வெளியாகிய பல திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களையும், வரவேற்புகளையும் பெற்றுள்ளன. இவற்றில் சில படம் திரையரங்குகளில் மட்டுமல்ல, OTT தளங்களிலும் வெற்றி கண்டுள்ளன. இந்நிலையில், இந்நேரம் வரை வசூல் அடிப்படையில் முன்னணியில் உள்ள 5 தமிழ் திரைப்படங்களை பார்க்கலாம்.
முதல் இடம்: குட் பேட் அக்லி: 2025 ஆம் ஆண்டில் தமிழில் வெளியாகி மிகப்பெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படமாக திகழ்கிறது ‘குட் பேட் அக்லி’. நடிகர் அஜித் குமார் மற்றும் திரிஷா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ரூ.90 கோடிக்கு நெட்பிளிக்ஸ் ஓடிடி உரிமையை வாங்கியது. திரையரங்கிலும் ஓடிடியிலும் வெற்றிகரமாக ஓடிய இந்த படம், தற்போது வரை ரூ.180 கோடிக்கு மேல் வசூலித்து 2025 வசூல் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இரண்டாம் இடம் விடாமுயற்சி: 2025ல் வெளியான திரைப்படங்களில் வசூல் ரீதியாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ திரைப்படம். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இப்படத்தில் த்ரிசா, அர்ஜுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது வரை இப்படம் ரூ.170 கோடி வரை வசூல் செய்துள்ளது. ஆனால், லைகா நிறுவனம் தெரிவித்தபடி தயாரிப்பு செலவு ரூ.298 கோடி என குறிப்பிடப்பட்டிருப்பது இந்த வெற்றியைச் சுற்றி புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது. வசூலில் சாதனை செய்தாலும், முதலீட்டுக்கேற்ப லாபம் கிடைத்ததா என்ற கேள்வி எழுகிறது.
மூன்றாம் இடம் டிராகன்: கோமாளி மற்றும் லவ் டுடே படம் பிரதீப் ரங்கநாதனுக்கு டிராகன் படம் பெரிய புகழையே தேடி தந்துள்ளது. அஷ்வின் மாரிமுத்து இயக்கத்தில் விஜே சித்து, ஹர்ஷத்கான் ஆகியோர் இணைப்பில் உருவாகி கடந்த பிப்ரவரி 21ம் தேதி வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்த திரைப்படம் தான் “டிராகன்”. இத்திரைப்படம் வெளியாகி 100 வது நாளையும் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. “டிராகன் திரைப்படம் ரூ.110 கோடிக்கு மேல் வசூலித்து லிஸ்டில் மூன்றாவது இடத்தில்” உள்ளது.
நான்காம் இடம் டூரிஸ்ட் ஃபேமிலி: இப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை இதுவரை அமைச்சர் மா. சுப்ரமணியன், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், இயக்குனர் ராஜமௌலி, நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி, என படத்தை பார்த்த பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் இதுவரை “பாக்ஸ் ஆபிசில் ரூ.91 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் நான்காவது இடத்தில்” உள்ளது.
ஐந்தாம் இடம் மத கஜ ராஜா: பலரது எதிர்பார்ப்புகளின் மத்தியில் இயக்குனர் சுந்தர் சி-யின் இயக்கத்தில் 12 வருடங்கள் கழித்து வெளியான திரைப்படம் தான் மத கஜ ராஜா. நடிகர் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலக்ஷ்மி சரத்குமார், மனோபாலா ஆகியோரின் நடிப்பில் காமெடி கதைக்களத்துடன் வெளியான இந்த படம் பலரது பாராட்டையும் பெற்றது. இத்திரைப்படம் “இதுவரை ரூ. 54 கோடி வசூல் செய்து ஐந்தாவது இடத்தில்” உள்ளது.
Read more: ஒசி சமோசாவுக்காக பாலியல் வழக்கை முடித்து வைத்த போலீசார்.. குட்டு வைத்த POCSO நீதிமன்றம்..!!