வேத ஜோதிடத்தின்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஜாதகம் மிகவும் சக்திவாய்ந்ததாக அமைந்துள்ளது என்று பிரபல ஜோதிடர் ராஜ்வீர் படேல் தெரிவித்துள்ளார்.
அவரது ஜாதகச் சக்கரத்தில் ராகு மிகச் சாதகமான நிலையில் இருப்பதாகவும், இது திடீர் மற்றும் எதிர்பாராத வெற்றியை தரக்கூடியதாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், அமித் ஷாவின் ஜாதகத்தில் ‘ராஜ யோகம்’ அமைந்துள்ளதால் அவர் வரலாற்று தலைமைப் பொறுப்பை அடையும் வாய்ப்பு அதிகம் எனவும், அது பிரதமர் பதவியையே சுட்டிக்காட்டுகிறது எனவும் ராஜ்வீர் படேல் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, அமித் ஷா 32வது உள்துறை அமைச்சராகவும், 2019 மே மாதம் முதல் நீண்டகாலமாக அந்தப் பொறுப்பில் உள்ளார். கூடுதலாக, ஜூலை 2021 முதல் கூட்டுறவு அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார். ராகுவின் சாதகமான நிலை வெற்றியை உறுதியளிக்கும் நிலையில், சனி அவரது உடல்நலத்திற்கு சில சவால்களை ஏற்படுத்தக்கூடும் என்று ஜோதிடர் எச்சரித்துள்ளார். ஆனால் இவை அவரது எழுச்சியை தடுக்காது, சில போராட்டங்களை மட்டுமே உருவாக்கும் எனவும் விளக்கமளித்துள்ளார்.
அகமதாபாத்தைச் சேர்ந்த ராஜ்வீர் படேல் கடந்த 16 ஆண்டுகளாக ஜோதிடத்துறையில் அனுபவம் பெற்றவர். பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோருக்கு அவர் வழங்கிய துல்லியமான கணிப்புகள் காரணமாக, இந்தியா முழுவதும் நம்பகமான பெயராக உயர்ந்துள்ளார்.
அரசியல் வரலாற்றில் பல தலைவர்களின் எழுச்சியில் ராகு முக்கிய பங்காற்றியுள்ளது என்றும், அதேபோல் அமித் ஷாவின் வாழ்க்கையிலும் ராகு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ராஜ்வீர் படேல் தெரிவித்தார். இது அவரை எதிர்காலத்தில் பிரதமர் பதவிக்கான வலுவான போட்டியாளராக மாற்றும் வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Read more: சற்று முன்…! தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சி.டி. நிர்மல் குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு…!



