ஜேசிபி இயந்திரங்களைப் பற்றி தெரியாதவர்கள் அரிதாகவே இருப்பார்கள். கட்டிடம் கட்டுதல், சாலையில் பள்ளம் தோண்டுதல், கழிவு அகற்றுதல் போன்ற அத்தியாவசிய பணிகளில் உலகம் முழுவதும் இந்த இயந்திரங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இந்திய சாலைகளில் ஜேசிபி இயந்திரம் வேலை செய்து கொண்டிருப்பதை சாதாரணமாக காணலாம்.
ஆனால், இன்று நாம் அடிக்கடி காணும் அந்த மஞ்சள் நிற ஜேசிபி இயந்திரம் ஆரம்பத்தில் அப்படியில்லை என்பதை பலர் அறியவில்லை. உண்மையில், ஜேசிபி இயந்திரங்கள் அறிமுகமாகிய ஆரம்ப காலங்களில் வெள்ளை மற்றும் சிகப்பு நிறங்களில்தான் இருந்தன. ஆனால் பின்பு நிறுவனம் அவற்றை மஞ்சள் நிறத்தில் தயாரிக்கத் தொடங்கியது.
இதற்கான முக்கிய காரணம் பாதுகாப்பும் காட்சிப்புலமும் ஆகும். மஞ்சள் நிறம் என்பது மனிதக் கண்களுக்கு பகலும் இரவும் எளிதாகத் தெரியும் நிறமாகும். அதனால், இயந்திரம் எங்கு இருந்தாலும், அது புலப்படும். இதன் மூலம் சாலைகளில், கட்டுமான இடங்களில் பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும். மேலும், தொழிலாளர்களின் பாதுகாப்புக்கும், விபத்துகளைத் தவிர்க்கவும் இந்த நிறம் பெரிதும் உதவுகிறது.
இவ்வாறு, இன்று நம் கண்களுக்கு பழக்கமான மஞ்சள் நிற ஜேசிபி இயந்திரத்தின் பின்னணியில் கூட ஒரு பாதுகாப்பு ரகசியம் உள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றத்தோடு, பொதுமக்கள் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவு, உலகளவில் ஜேசிபி = மஞ்சள் என்ற அடையாளமாகவே மாறிவிட்டது.
Read more: இந்த நேரத்தில் வாக்கிங் போனால் தான் முழு நன்மைகளும் கிடைக்கும்! 90% மக்களுக்கு இது தெரியாது!