முதல்வர் ஸ்டாலினை 2-வது முறையாக சந்தித்தது ஏன்? என்பது குறித்து ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.
இன்று தமிழக அரசியலில் பேசு பொருளாக இருப்பது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான்… காரணம், இன்று காலை முதல்வருடான சந்திப்பு, பின்னர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது என ஓபிஎஸ்-ன் அதிரடி முடிவுகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.. ஏற்கனவே ஓபிஎஸ் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது..
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினை முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் இன்று 2வது முறையாக சந்தித்துள்ளார்.. முதல்வரின் உடல்நலனை விசாரிப்பதற்காக அவரது இலத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் வருகை தந்தார்.. முன்னாள் எம்.பி கோபால கிருஷ்ணன். ரவீந்திரநாத் உள்ளிட்ட நிர்வாகிகளும் ஓ.பன்னீர்செல்வத்துடன் சென்றுள்ளனர்.. ஓ.பன்னீர்செல்வத்தை துணை முதல்வர் வாசல் வரை வந்து வரவேற்றார்.. 30 நிமிடங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நீடித்தது..
அதிமுகவின் முக்கியமான தலைவராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினை சந்திப்பது அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.. ஒரே நாளில் முதல்வர் ஸ்டாலினுடன் இரண்டாவது முறையாக பன்னீர்செல்வம் சந்திப்பு நிகழ்ந்துள்ளது..
முன்னதாக இன்று காலை முதல்வரை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “ நான் நடைபயிற்சி செய்வது வழக்கம்.. பூங்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது தற்செயலானது..” என்று கூறினார்..
ஏற்கனவே ஓபிஎஸ் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.. ஆனால் தற்போது பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், ஓபிஎஸ் முதல்வரை சந்திக்கவிருப்பது, திமுக கூட்டணியில் ஓபிஎஸ் இணையக்கூடும் என்று தகவல் வெளியாகி வருகின்றன.. இது வெறும் மரியாதை நிமித்த சந்திப்பு இல்லை, அரசியல் நிமித்தமான சந்திப்பு என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
இந்த நிலையில் முதல்வரை சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் “ முதல்வரின் உடல் நலனை விசாரிக்க, மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.. அரசியல் நிமித்தமாக முதல்வரை சந்திக்கவில்லை.. உடல்நலனை விசாரிக்கவே சந்தித்தேன்.. அரசியலில் நிரந்தர நண்பர்களும், எதிரிகளும் இல்லை.. எதிர்காலத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.. தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம்.. அரசியலில் எதுவும் நடக்கலாம்.. எனக்கென்று சுயமரியாதை உள்ளது.. நான் அம்மா உடன் பணியாற்றி இருக்கிறேன்.. எனக்கு அனைத்தும் தெரியும்.. தமிழகத்திற்கு மத்திய அரசு கல்வி நிதி தராததால் வருத்தம் உள்ளது..” என்று தெரிவித்தார்..
திமுக உடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், உங்கள் சிந்தனையில் இருக்கும் கருத்துகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.. கூட்டணி தொடர்பாக தவெக உடன் நாங்களும் பேசவில்லை, அவர்களும் பேசவில்லை..