எதற்காக அப்படி சொன்னீர்கள்? திருப்பரங்குன்றம் வழக்கு.. கொதிந்தெழுந்த நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன்!

thiruparamkuntram

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜி.ஆர். சாமிநாதனின் உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.. இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜரானார்கள்.. மேலும் தமிழக அரசின் தலைமை செயலாளர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் காணொளி காட்சி மூலம் ஆஜரானார்கள்..


அப்போது நீதிபதி எனது உத்தரவை யாரும் மதிக்கவில்லை.. இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் கேட்டார்.. நான் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக 144 தடை உத்தரவை பிறப்பித்தது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.. நேற்றைய தினம் நடந்த வழக்கு விசாரணையில் இரு நீதிபதிகள் அமர்வு முன்பு காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விகா சிங், ஜி.ஆர் சாமிநாதன் தேர்தலில் போட்டியிட போவதாக வாதிட்டார்.

இதுகுறித்து கடும் கோபமடைந்த நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன், ” தேர்தலில் நான் போட்டியிடப் போகிறேனா? எதற்காக அப்படி பேசினீர்கள்” என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.. அப்போது தலைமை செயலாளர், எந்த உள்நோக்கத்துடனும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கும், மத நல்லிணக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது..

அப்போது நீதிபதி, சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாமல் இருக்கக் கூடாது.. சட்டம் ஒழுங்கை காக்க வேண்டியது உங்கள் வேலை என்று தெரிவித்தார்..

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதற்கான காரணங்களை விரிவான பதில் மனுவாக சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் தற்போது இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்..

Read More : திமுகவின் அடுத்த மூவ்; கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட குழு.. பரபரக்கும் தேர்தல் களம்..!

RUPA

Next Post

மெஸ்ஸிக்கு அனந்த் அம்பானி கொடுத்த காஸ்ட்லி வாட்ச்; அதன் விலை இத்தனை கோடியா? ஷாக் ஆகாம படிங்க..!

Wed Dec 17 , 2025
Anant Ambani has garnered attention for gifting a luxury watch worth Rs. 10.91 crore to the world-famous football star Lionel Messi.
messi anant ambani

You May Like