மனைவி வேறொரு ஆணின் கையைப் பிடித்துக்கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்ததை நேரில் பார்த்த கணவன் கதறி அழுத காட்சிகள் இணையத்தில் வைரலாகிறது.
இணையத்தில் வைரலாகும் இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. வைரலாகும் வீடியோவில், ஒரு இளைஞன் தனது மனைவி மற்றொரு இளைஞனுடன் கையை பிடித்துக் கொண்டு நடந்து செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சாலை வீதியில் கதறி அழுத கணவன் “ஏன் என் ஐந்து வருடங்களை வீணடித்தாய்? என் வாழ்க்கையை ஏன் இப்படி பாழாக்கிட்ட?” என கோபம் கலந்த துயரத்துடன் மனைவியை நோக்கி கத்துகிறார்.
மிகுந்த கோபத்தில் இருந்தாலும், சில நிமிடங்களில் அவர் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு தன் மனைவியைத் தள்ளிவிட்டான். அவள் அவனையும் பின்னுக்குத் தள்ளினாள். ஒருகட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற இளைஞன் மனைவியை தாக்கினார். இந்த பரபரப்பான சம்பவம் எப்போது நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனாலும், வீடியோவில் பதிவு செய்யப்பட்ட இந்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த பலர் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். “திருமணத்திற்குப் புறம்பான விவகாரங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. இதற்கு யார் பொறுப்பு?” என ஒரு இளைஞன் பதிவிட்டார். மற்றொரு பயனர் அந்த இளைஞரின் துயரத்தை உணர்ந்து வருத்தம் தெரிவிக்கிறார். “அந்தப் பெண்ணின் கண்களில் குற்றவுணர்வு இல்லை.. அந்தப் பெண்ணைப் பிரிந்து ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என ஆறுதல் தெரிவித்தார்.
Read more: 25 பேர் பலி.. பிலிப்பைன்சை புரட்டி போட்ட புயல், வெள்ளம்.. 2.78 லட்சம் மக்கள் இடம்பெயர்வு..!!