2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே தனித்து தான் போட்டியிட்டு வருகிறது. திராவிட சித்தாந்தத்திற்கு நேர்எதிர் நிலைப்பாட்டை கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிட கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று சூளுரைத்து வருகிறார்.
சமீபத்தில் சீமான் பாஜக மற்றும் அதிமுக தலைவர்களுடன் நெருக்கம் காட்டினார். அண்ணாமலையுடன் ஒரே மேடையில் அமர்ந்த சீமான் ஒருவருக்கொருவர் புகழ்ந்து கொண்டது தேசிய ஜன நாயக கூட்டணியில் நாம் தமிழர் கட்சி இணைய வாய்ப்பு இருக்கலாம் என்ற ஊகங்களை உருவாக்கின. ஆனால் சீமான் மீண்டும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது ஏன் என விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில் தேர்தலில் கூட்டணி வைப்பதற்கு நாங்கள் ஏன் கட்சியை தொடங்க வேண்டும்.. அந்த கட்சியுடனை இணைந்து பணியாற்றலாமே.. நாங்கள் ஒரு கோட்பாட்டை வைத்து நகர்கிறோம்.. நாங்கள் புரட்சியை முன் வைத்து நகர்கிறோம்.. சமரசம் செய்ய வேண்டும் என்றால், எப்போதோ கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கலாம்? நாம் தமிழர் கட்சி எப்பவும் தனித்து தன போட்டியிடும் என உறுதி அளித்தார்.
தவெக தலைவர் விஜய் பிரிக்கப் போகும் வாக்குகள் யாருக்கு சாதகமாக அமையும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான், யாரும் யாருடைய வாக்குகளையும் பிரிக்க முடியாது.தேர்தல் நேரத்தில் இந்த கட்சி சொல்வது சரியாக இருக்கிறது.. இந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் சரியாக இருக்கும் என்று மக்கள் வாக்களிப்பார்கள்.. யாரும் யாரின் வாக்குகளையும் பிரிக்க முடியாது என்றார்.
Read more: “மேடை போட்டு என்னை அசிங்கப்படுத்துறாங்க”..!! திமுகவினர் மீது அரக்கோணம் மாணவி பரபரப்பு