ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா பயணத்தை முடித்து திரும்பு முன், ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் ராஷ்டிரபதி பவனில் ஏற்பாடு செய்த விருந்தில் பங்கேற்றார்.. இந்த உயர்நிலை விருந்தின் மெனு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த மெனு உணவு ஸ்டார்டர் முதல் முக்கிய உணவுகள், வரை இந்தியாவின் பாரம்பரிய மற்றும் பிரபலமான சைவ உணவுகளை கொண்டிருந்தது. ஆனால் இணைய பயனர்கள் இதில் இறைச்சி உணவுகள் இல்லை, மதுபானம் இல்லை என்பதைக் குறிப்பிட்டு கலாய்க்கும் வகையில் கருத்துகள் பதிவிட்டுள்ளனர்.
ரஷ்ய அதிபர் புடினுக்கு வழங்கப்பட்ட பக்க மெனு அட்டையே தற்போது வைரலாகியுள்ளது. “ஜனாதிபதி திரௌபதி முர்மு ரஷ்ய அதிபர் புதினுக்கு அளித்த மாநில விருந்தில் மிகவும் கவனமாகத் தேர்வு செய்யப்பட்ட மெனு இடம்பெற்றது” என்று குறிப்பிட்டது.
புதினுக்கான மாநில விருந்தின் மெனு இதுதான்:
நான்கு பக்கங்களைக் கொண்ட அந்த மெனுவில் ஆரம்ப உணவுகள், முக்கிய உணவுகள், இந்திய ரொட்டிகள் மற்றும் இனிப்புகள் போன்ற பல்வேறு வகைகள் இடம்பெற்றிருந்தன. இதே நேரத்தில், மெனுவில் மட்டும் சைவ உணவுகள் இருப்பதை நெட்டிசன்ஸ் விரைவாக கவனித்து, அதில் எந்தவும் அசைவ வகைகள் அல்லது இந்திய வைன்கள் போன்ற மதுபானங்கள் இடம்பெறாதது குறித்து கேள்வி எழுப்பினர்.
காங்கிரஸ் தலைவர் கார்த்தி சிதம்பரம் கூட இந்த மெனு தேர்வை குறித்து விமர்சித்தார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர் “ முழுக்க சைவமா? ஏன்? இந்திய சமையலை உண்மையாகக் கொண்டாட வேண்டுமெனில் இறைச்சி, கோழி மற்றும் கடல் உணவுகள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்திய வைன்களும் இடம்பெற்றிருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், “மாமிசம் மற்றும் மீன் சாப்பிட விரும்புவதாகத் தானே சொல்கிற, முன்னாள் KGB, ஜூடோ பிளாக் பெல்ட் போன்ற ‘ஆல்பா மேல்’ எனச் சொல்லப்படும் ஒரு தலைவருக்குச் சைவ உணவு மட்டுமே பரிமாறுவது ஒரு பலவீனமான முடிவு. ரஷ்யாவுக்குத் திரும்பிய பிறகு இதைப் பற்றி அவர்கள் நிச்சயம் நகைச்சுவையாக்கிக் கொள்ளப் போகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More : “ஹெச். ராஜா சாப்பிட்டு போட்ட எச்சிலையில் எடப்பாடி பழனிசாமி உருள தயாரா..? ” R.S. பாரதி காட்டமான கேள்வி..!



