இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27-ந் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. வழிபாட்டுக்கு பிறகு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பட்டினப்பாக்கம், காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர், பாலவாக்கம் உள்ளிட்ட கடற்கரைகளில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டதை தொடர்ந்து பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதியை சுற்றி ஏராளமான கழிவுகள் தேங்கியது. சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகலின் கழிவுகள் அப்புறப்படுத்தாதது குறித்து பசுமை தீர்பாயம் சென்னை மாநகராட்ச்சிக்கு கேள்வி எழுப்பியது.
தீர்ப்பாயம் கூறியதாவது, பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவிந்துள்ள கழிவுகளை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி தவறவிட்டது. கட்டணங்கள் வசூலித்தால் அந்த நிதியை கொண்டு சிலை கரைப்புக்கு பிறகு தூய்மை பணிகளை மேற்கொள்ளலாம். ஆபத்து இல்லாத பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட சிலைகள் மட்டுமே கரைக்க அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் சென்னை மாநகராட்சி இதை செய்ய தவறிவிட்டது என அதிருப்தி தெரிவித்தது.