நாம் தமிழர் கட்சி அனுமதியின்றி போராட்டம் நடத்தியது தொடர்பாக ஏன் வழக்கு பதியவில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காவலாளி அஜித்கொலை காவல்துறையினர் விசாரணையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த கொலையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தத். எனினும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்கவில்லை..
இதை தொடர்ந்து 8-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி நாம் தமிழர் சார்பில் காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது.. எனினும் சிவகங்கையில் கண்டதேவி கோயில் தேரோட்டம் என்பதால் அன்றைய தினம் நாதக ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி சில நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாதக சார்பில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கண்டதேவி கோயில் தேரோட்டம் இருப்பதால் நீதிமன்றமும் அனுமதி வழங்க முடியாது என்று வழக்கை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதி ” தேரோட்டம் என்பதால் தான் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. இதை புரிந்து கொள்ளாமல், தடையை மீறி போராட்டம் நடத்துவேன் என்று கூறுவது அரசியல் கட்சிக்கு அழகல்ல.. ஒரு அரசியல் கட்சிக்கு போராட்டம் நடத்த உரிமை உள்ளது.. அதே நேரத்தில் பொதுமக்களின் நலனையும் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்..
சட்டத்தின் முன் ஜனாதிபதி முதல் சாதாரண குடிமகன் வரை அனைவரும் சமமானவர்கள் தான்.. ஒரே இடத்தில் தொடர்ச்சியாக போராடுவதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவர் என்பதை உணர வேண்டும்.. பொதுவெளியில் இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுகளை நீதிமன்றம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. கட்சி தலைவர் பங்கேற்கவில்லை என்பதற்காக மீண்டும் போராட்டம் நடத்த அனுமதி கோருவதை எப்படி ஏற்பது? இந்த ஆர்ப்பாட்டம் நடத்த மனுதாரர் புதிதாக மனு அளிக்க வேண்டும் என்றும் காவல்துறை 24 மணி நேரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்..
Read More : EPS-ஐ கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்… கோயில் வருமானம் குறித்த பேச்சால் சர்ச்சை..