தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.. சென்னை, கோவையில் தலா 3 தொகுதிகளை பாஜக கோரிய நிலையில், எடப்பாடி பழனிசாமி சென்னையில் மயிலாப்பூர், கோவை வடக்கு மட்டும் வழங்கி உள்ளார்.. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக வென்ற 4 தொகுதிகளில் 2 தொகுதிகள் மட்டுமே மீண்டும் வழங்கப்பட்டுள்ளன..
இந்த சூழலில் பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது.. அதன்படி மயிலாப்பூரில் தமிழிசை சௌந்தரராஜன, அவினாசியில் எல். முருகன், கோவை வடக்கில் வானதி சீனிவாசன், சாத்தூரில் நயினார் நாகேந்திரன், விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்..
கோவையில் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், அண்ணாமலை இந்த முறை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும் என தேசிய தலைமை அறிவுறுத்தியதாக கூறப்பட்டது.. ஆனால் விரும்பிய தொகுதி கிடைக்காததால் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அண்ணாமலை முடிவு செய்துவிட்டதாக கூறப்பட்டது. அதற்கேற்றார் போலவே இன்று வெளியான பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை..
இந்த நிலையில் அண்ணாமலை போட்டியிடாதது குறித்து மத்திய அமைச்சரும் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.. தமிழக மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.. பாஜக வேட்பாளர்கள் அனைவரும் அமோக வெற்றி பெறுவார்கள்..
அர்ப்பணிப்புடன் உழைக்கும் செயல் வீரரான அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை.. அவர் ஒரு தொண்டராக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளவே விரும்புகிறார்.. கட்சியினரின் உணர்வு, விருப்பத்தின் பேரிலேயே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது..” என்று தெரிவித்தார்..
Read More : வேட்பு மனுவிலேயே இவ்வளவு சொதப்பலா..? 3 நாட்களில் வயதை குறைத்த விஜய்..! புதிய சர்ச்சை..!



