தவெக மாநாட்டுத் திடல் முகப்பில் அண்ணா, எம்.ஜி.ஆர் இடம்பெற்றது ஏன்? ஆதவ் அர்ஜுனா விளக்கம்..

Madurai tvk

தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டில் தவெக நிர்வாகிகள் உரையாற்றி வருகின்றனர்.. அந்த வகையில் இந்த மாநாட்டுத் திடலின் முகப்பில் நாட்டு முகப்பில் அண்ணா, எம்.ஜி.ஆர் படங்கள் வைக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்தார்..


தவெக மாநாட்டில் பேசிய அவர் “ 1967-ல் அண்ணால் எல்லோருக்குமான சமூக நீதி, சமத்துவ அரசியலை உருவாக்கினார்.. அது தான் திராவிடம்… அண்ணாவின் குறிக்கோளை கருணாநிதி தனது சுயநலத்திற்காக மாற்றிய போது எம்.ஜி.ஆர் தனிக்கட்சியை தொடங்கினார்.. திமுக தலைவர் ஸ்டாலின், என்றைக்கோ அண்ணா கொண்டு வந்த கொள்கைகளில் இருந்து விலகிவிட்டார்.. அதிமுகவும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய கொள்கைகளில் இருந்து தடுமாறி பாஜக உடன் இணைந்து செயல்படுகிறது..

ஆனால் அண்ணா, எம்.ஜிஆர் வழியில் விஜய் செயல்பட்டு வருகிறார்.. அண்ணா, எம்.ஜி.ஆர் கொண்டு வந்த கொள்கைகளை ஒருவர் பின்பற்ற முடியும் என்றால், அது விஜய்யால் மட்டுமே முடியும்.. விஜய் தலைமையிலான தவெகவால் அந்த கொள்கைகளை கடைசிவரை பின்பற்ற முடியும்.. அண்ணா கூறியது போல ஏழைகளின் அரசை உருவாக தலைவர் விஜய்யை நாங்கள் அழைக்கிறோம்.. தம்பி வார், தலைமையேற்க வா. என்று அழைக்கிறோம்.. 2026 தேர்தல் தவெக வெற்றி பெற்று விஜய் முதல்வராக பதவியேற்பது உறுதி..” என்று தெரிவித்தார்..

Read More : விஜய் பேசவே ஆரம்பிக்கல.. அதற்குள் மாநாட்டில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறிய தவெக தொண்டர்கள்..!

RUPA

Next Post

திரைப்பட பாணியில் நடந்த பயங்கரம்..!! சுடுகாட்டில் மனைவி.. கால்வாயில் ஆடைகள்..!! திடுக்கிட வைக்கும் தகவல்..!!

Thu Aug 21 , 2025
மோகன்லாலின் திரிஷ்யம் திரைப்பட பாணியில் 30 வயது பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஷபாப் அலி. இவர், பெயிண்டராக வேலைபார்த்து வரும் நிலையில், இவரது மனைவி பார்த்திமா. இந்நிலையில், தன்னுடைய மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக கணவர் ஷபாப் அலி சந்தேகப்பட்டுள்ளார். இதனால், பலமுறை எச்சரித்தும் அவர் கேட்காததால், தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி அவர் தன்னுடைய மனைவிக்கு விஷம் மற்றும் […]
Rape 2025 1

You May Like