கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கும், வைலாமுர் கிராமத்தை சேர்ந்த 25 வயது இளைஞருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமான இரண்டரை மாதத்தில், புதுமணப்பெண் தனக்கு வயிற்று வலிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து, கணவர் அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்தப் பெண் 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் அளித்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த கணவர், தன்னுடைய மனைவியின் கர்ப்பத்திற்கு காரணமான நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், புதுப்பெண்ணின் கர்ப்பத்திற்கு அவருடைய தாய் மாமன் தான் காரணம் என்பது தெரியவந்தது. அவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வரும் என்பதால், அவர் தனது அக்கா வீட்டில் வந்து தங்கியிருந்துள்ளார். அப்போது, அவர் தனது அக்கா மகளான அந்தப் பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறிப் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதன் காரணமாகவே அந்தப் பெண் கர்ப்பம் அடைந்தது அம்பலமானது.
இந்த தகவலையடுத்து, அந்த பெண்ணின் தாய் மாமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் படுகாயம் அடைந்து, தற்போது கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருமணமான சில மாதங்களிலேயே மனைவி கர்ப்பமாக இருப்பதும், அதற்கு காரணமான தாய் மாமன் கோமாவில் இருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Read More : ராமநாதபுரம் அரசு விடுதியில் பயங்கரம்..!! 8ஆம் வகுப்பு மாணவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து சித்திரவதை..!!



