உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் லோனி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2009ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு 6 மற்றும் 9 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2024இல் இருந்து மனைவி இன்ஸ்டாகிராமுக்கு அடிமையாகியுள்ளது. இதனால், அவர் அடிக்கடி ரீல்ஸ் போடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனால், குடும்பத்தில் அமைந்து கலைந்துள்ளது.
கணவரின் குற்றச்சாட்டின்படி, அவரது மனைவி அடிக்கடி அசிங்கமான வீடியோக்கள் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்துள்ளார். இதனை தடுத்தால், சண்டை போடுவதோடு பெட்ரோல் ஊற்றி தன்னை எரித்துக் கொலை செய்யவும், தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றுள்ளார்.
மேலும், கணவரை தாக்குவதற்காக கத்தியை எடுத்துக்கொண்டு மனைவி விரட்டிய வீடியோவும் காவல் ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ”மக்கள் மத்தியில் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக தன்னை அழித்துக்கொள்வதற்கும் தயங்கவில்லை. உன்னை உயிருடன் விட மாட்டேன் என மனைவி அடிக்கடி மிரட்டுவதாக கணவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து கணவர் மேலும் கூறுகையில், மனைவி ரீல்ஸ் எடுக்கும் போதெல்லாம் மற்ற ஆண்களுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். மேலும், அசிங்கமான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதை எதிர்த்தால், மனைவி மட்டுமின்றி, அவரது நண்பர்களும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்” என்று கூறியுள்ளார்.
கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், காஜியாபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதள புகழுக்காக உயிரை ஆபத்தில் ஆழ்த்தும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.