திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளால் தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவர் தன்னுடன் இருக்க வேண்டும் என்று கோரி கணவர் ஒருவர் ஒடிசா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் அவரை கடுமையாக சாடி உள்ளனர்.. இப்படி ஒரு அற்பமான ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்ததற்காக அவருக்கு ரூ.25,000 அபராதமும் விதித்தும் உத்தரவிட்டனர்..
ஒடிசா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஹரிஷ் டாண்டன் மற்றும் நீதிபதி முரஹரி ஸ்ரீ ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, கணவர் தனது கட்டளைப்படி செயல்பட மனைவியை கட்டாயப்படுத்த முடியாது அல்லது “மனைவியை வர்த்தக பொருளாக” கருத முடியாது என்று குறிப்பிட்டது..
மேலும் ” பாலின பாகுபாடு இல்லாமல் ஒவ்வொரு தனிநபருக்கும் அடிப்படை உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் ஒரு குறிப்பிட்ட பாலினத்தால் இந்த உரிமையை ஒரு வழி போக்குவரத்து என்று கருத முடியாது. மனைவிக்கு தனது வாழ்க்கையின் சுயாதீனமான முடிவை எடுக்க உரிமை உண்டு, மேலும் மனைவி கணவரிடம் இருந்து பிரிந்து வாழ முடிவு செய்தால், அது அவரின் உரிமை.. அவரை கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிப்பதன் மூலம் நீதிமன்றத்தின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவோ அல்லது தவறாகப் பயன்படுத்தவோ கணவருக்கு அனுமதிக்க முடியாது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
கணவரை விட்டுப் பிரிந்த பிறகு, அந்தப் பெண்ணும் அவரது குழந்தையும் தனது சகோதரருடன் வசித்து வந்தனர். இருப்பினும், தனது மனைவியை கட்டாயப்படுத்தி தன்னுடன் வைத்துள்ளதாக அந்த கணவர் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டு குறித்து காவல்துறையிலும் புகார் அளித்தார்.
மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு, ஆட்கொணர்வு மனுவின் பின்னணியில் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்ள மனுதாரரின் மனைவியை போலீசார் தொடர்பு கொண்டனர். திருமண உறவில் ஏற்பட்ட பிரச்சனையே வீட்டை வெளியேறுவதற்கான காரணம் என்று அவர் குறிப்பிட்டார். இது நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டவுடன், தனிப்பட்ட தகராறுகளைத் தீர்க்க சட்ட விதிகளை தவறாகப் பயன்படுத்தியதற்காகவும், தனது மனைவியை ஒரு வியாபாரம் செய்யும் பொருளை போல நடத்தியதற்காகவும் மனுதாரரை நீதிபதிகள் கடுமையாக சாடினர்..
அப்போது இந்த மனு ணப்பம் அற்பமானது.. தவறான கருத்தாகும், இந்த மனுவை தள்ளுபடி செய்வதுடன் மட்டுமல்ல, ரூ.25,000 அபராதமும் விதிக்கப்படுகிறது..” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்..