கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த விஜய் என்பவருக்கும் கீதா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில், கீதாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த திலீப் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில், கீதா தனது கள்ளக்காதலன் திலீப்பை வீட்டுக்கே வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
சமீபத்தில் இவர்களது தொடர்பு குறித்து தெரிய வந்ததும் அதிர்ச்சியடைந்த விஜய், தனது மனைவியைக் கண்டித்துள்ளார். இருப்பினும், கீதா அந்தத் தொடர்பைத் துண்டிக்காமல் தொடர்ந்துள்ளார். இந்நிலையில், கடந்த செப்.30ஆம் தேதி இரவு, விஜய் வெளியே சென்றிருந்த சமயம் பார்த்து, காதலன் திலீப் மீண்டும் கீதாவின் வீட்டுக்கு வந்து அவருடன் தனிமையில் இருந்துள்ளார்.
பின்னர், வெளியே சென்ற விஜய் திடீரென வீட்டுக்குத் திரும்பி வந்து பார்த்தபோது, கள்ளக்காதலனுடன் கீதா இருப்பதை கண்ணால் கண்டு ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த கீதா, சமையலறையில் இருந்து அரிவாளை எடுத்து வந்து விஜய்யை வெட்ட முயற்சித்துள்ளார். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற விஜய், அந்த அரிவாளை பிடுங்கி, கீதாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்த கொலைச் சம்பவத்தைக் கண்ட காதலன் திலீப், உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடினார். திலீப்பை துரத்திச் சென்ற விஜய், ஒரு மரத்தடியில் அவரை பிடித்துக் காலில் சரமாரியாகத் தாக்கியதில், அவருக்குக் கால் முறிவு ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதி மக்கள் விரைந்து வந்து விஜய்யை தடுத்து நிறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விஜயை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், படுகாயமடைந்த திலீப் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Read More : பெரும் சோகம்..!! தூக்கி வீசிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்..!! துடிதுடித்து பலியான 4 சிறுவர்கள்..!!