குஜராத் மாநிலம் வடோதரா நகரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், தனது சொந்த அண்ணனால் இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணின் அண்ணன் (29) கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த ஜூலை 13 ஆம் தேதி அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த தங்கையை அண்ணன் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அதேபோல், ஆகஸ்ட் 22ஆம் தேதி இரண்டாவது முறையாகவும் அவரை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், இதனால் பாதிக்கப்பட்ட அந்த தங்கை, துணிச்சலுடன் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் கடந்த 3 ஆண்டுகளாக ஒரு இளைஞரைக் காதலித்து வந்தது தெரியவந்தது.
இந்த காதல் விவகாரத்தை அறிந்த அண்ணன், காதலை கைவிடுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். எனவே, இந்தக் காரணத்தைப் பயன்படுத்தி அடிக்கடி தனது தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான். இதையடுத்து, இளம்பெண்ணின் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அண்ணனை கைது செய்தனர். மேலும், குற்றம் நிகழ்ந்தபோது பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் ஆடைகளை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : ஆண்ட்டியை விட்டு வைக்காத இளைஞன்..!! உண்மை தெரிந்தும் ஓயாத உல்லாசம்..!! கடைசியில் திடுக்கிடும் சம்பவம்..!!