விழுப்புரம் மாவட்டம் வி.சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான மணிகண்டன் (32) மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில், அவரது மனைவி தமிழரசி (25), அவரது கள்ளக்காதலன் சங்கர் (52) உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலையின் பின்னணி என்ன..?
மணிகண்டனும், அவரது மனைவி தமிழரசியும் 6 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் கட்டிட வேலை செய்துவந்த நிலையில், மேஸ்திரி சங்கருடன் தமிழரசிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் மணிகண்டனுக்கு தெரியவந்த நிலையில், மனைவியை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனாலும், சங்கருடனான கள்ளத்தொடர்பை அவர் கைவிடவில்லை. இதனால், மணிகண்டன் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். தனது வேதனையை சங்கரிடம் தமிழரசி தெரிவித்த நிலையில், மணிகண்டனை கொலை செய்ய கள்ளக்காதலன் சங்கர் திட்டமிட்டார்.
மதுவில் கலந்த சைனைடு :
இந்த கொலைக்கு, உறவினர்களான கார்த்திக் ராஜா, ஸ்வேதா மற்றும் சீனிவாசன் ஆகியோரின் உதவி சங்கர் நாடியுள்ளார். இதையடுத்து, தங்க நகைக்கடைகளில் பயன்படுத்தப்படும் சைனைடை, மதுவில் கலந்து மணிகண்டனுக்கு கொடுத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி, ஸ்வேதா மணிகண்டனுக்கு கட்டிட வேலைக்கு அட்வான்ஸ் பணம் தருவதாகக் கூறி, விழுப்புரம் புறவழிச்சாலையில் உள்ள இந்திரா நகர் பகுதிக்கு அழைத்துள்ளார்.
மணிகண்டனும் தனது மனவளர்ச்சி குன்றிய உறவுக்கார சிறுவன் ஒருவனை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும், அந்த கும்பல், சிறுவனை ஒரு கிலோமீட்டர் தொலைவிலேயே நிற்க வைத்துவிட்டு, மணிகண்டனுக்கு சைனைடு கலந்த மதுவைக் கொடுத்துள்ளனர். இதைக் குடித்த அவர் துடித்து இறந்ததாக கூறப்படுகிறது.
முதலில், இந்த வழக்கின் பின்னணி புரியாமல் போலீசார் திணறி வந்த நிலையில், சம்பவத்தின்போது அந்த சிறுவன், மணிகண்டனை ஒரு பெண் உட்பட மூவர் அழைத்துச் சென்றதாகவும், பின்னர் அவர் இறந்து கிடந்ததாகவும் வாக்குமூலம் அளித்தான். இதுதான் இந்த வழக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது.
பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், குற்றவாளிகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தமிழரசி, சங்கர், சீனிவாசன் மற்றும் ஸ்வேதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த ஸ்வேதாவின் கணவர் கார்த்திக் ராஜாவையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : ஆண்ட்டியை விட்டு வைக்காத இளைஞன்..!! உண்மை தெரிந்தும் ஓயாத உல்லாசம்..!! கடைசியில் திடுக்கிடும் சம்பவம்..!!