கர்நாடக மாநிலம் பெங்களூரு ஞானபாரதி காவல் எல்லைக்குட்பட்ட உல்லால் மெயின் ரோட்டில் உள்ள பிரஸ் லே அவுட் பகுதியில், மனைவிக்கு வேலைக்குச் செல்ல எதிர்ப்பு தெரிவித்த கணவர் அவரை கொலை செய்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் பின்னலவாடி கிராமத்தைச் சேர்ந்த தர்மசீலன் (29) என்பவரும், அவரது மனைவி மஞ்சு (28) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர்.
வெளிநாட்டில் துபாயில் பெயிண்டராகப் பணிபுரிந்து வந்த தர்மசீலன், பின்னர் வேலையை விட்டுவிட்டு பெங்களூருவுக்கு திரும்பினார். கணவனும் மனைவியும் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு, 3 நாட்களுக்கு முன்புதான் மீண்டும் பெங்களூருவுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி இரவு, மனைவி வேலைக்கு செல்வதை தர்மசீலன் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், மதுபோதையில் இருந்த அவர், மஞ்சுவுடன் கடுமையாகத் தகராறு செய்துள்ளார். இந்த தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தர்மசீலன், கத்தியால் மனைவியை 8 முறை குத்திக் கொடூரமாக கொலை செய்துள்ளார். மனைவியைக் கொன்ற பிறகு, அதே வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
மஞ்சுவின் தந்தை பெரியசாமி மகளைப் பார்க்க வீட்டிற்கு வந்தபோதுதான் இந்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, தகவல் அறிந்த ஞானபாரதி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தம்பதியர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை மற்றும் தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : உங்கள் வீட்டில் வைஃபை ரூட்டர் இருக்கா..? இரவில் ஆஃப் செய்யாவிட்டால் ஆபத்தா..? கட்டாயம் இதை படிங்க..!!