காதலர் தினத்தில் கள்ளக்காதலனோடு ஊர் சுற்றிய மனைவி..!! நேரில் பார்த்த கணவன்..!! நடுரோட்டில் நடந்த பயங்கரம்..!!

Crime 2026 13

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூரில், காதலர் தினமான நேற்று (பிப்ரவரி 14) ஒரு சினிமா பாணியிலான மோதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது மனைவி மற்றொரு நபருடன் நெருக்கமாக சுற்றித் திரிவதைப் பார்த்த கணவர், ஆத்திரத்தில் இருவரையும் நடுரோட்டில் வைத்துத் தாக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹாப்பூர் நகரின் முக்கியப் பகுதியான மீரட் சாலை மேம்பாலம் அருகே நடைபெற்ற இந்தச் சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தனது மனைவியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த கணவர், நேற்று அவரை ரகசியமாக பின்தொடர்ந்துள்ளார். அப்போது, ஹாப்பூர் மேம்பாலம் அருகே ஒரு நபரின் மோட்டார் சைக்கிளில் தனது மனைவி செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக வாகனத்தை மறித்தார். ஆரம்பத்தில் தொடங்கிய காரசாரமான வாக்குவாதம், அடுத்த சில நிமிடங்களிலேயே வன்முறையாக மாறியது. ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற கணவர், மனைவியையும் அவரது காதலனையும் பொதுமக்களுக்கு முன்னிலையிலேயே சரமாரியாக தாக்கத் தொடங்கினார்.

இந்த மோதலின் போது, தனது காதலன் தாக்கப்படுவதை தாங்கிக் கொள்ள முடியாத மனைவி, இருவருக்கும் இடையில் புகுந்து கணவரைத் தடுத்துச் சமாதானப்படுத்த முயன்றார். இந்தக் காட்சிகள் அங்கிருந்த மக்களால் வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து, தகவலறிந்து விரைந்து வந்த சிட்டி கோட்வாலி போலீசார், நடுரோட்டில் சண்டையிட்டு கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் காதலன் ஆகிய மூவரையும் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Read More : தமிழ்நாட்டில் நாளை முதல் லாரிகள் ஓடாது..!! அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்..!!

CHELLA

Next Post

கண்ணை மறைத்த கள்ளக்காதல்..!! 3 வயது பிஞ்சு குழந்தையையும் விட்டு வைக்கல..!! காதலன் செய்வதை வேடிக்கை பார்த்த தாய்..!!

Sun Feb 15 , 2026
தருமபுரியில் பெற்ற தாயே தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற மகளை சித்திரவதை செய்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தருமபுரி சாலை விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த சிவசங்கர் என்பவரின் மனைவி எழிலரசி (23). இந்தத் தம்பதியினருக்கு 3 வயதில் சிவதர்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், பாலக்கோடு பகுதியை சேர்ந்த ஐயப்பன் (28) என்பவருடன் எழிலரசிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. தனது கணவர் சிவசங்கரின் எச்சரிக்கையையும் மீறி, கடந்த […]
Child Rape 2025

You May Like