2025 ஆம் ஆண்டு குறித்த பாபா வங்காவின் கணிப்பு மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது.
பாபா வங்கா ஒரு பிரபலமான தீர்க்கதரிசி ஆவார். அவர் எதிர்காலத்தைக் காணும் தெய்வீக சக்தி கொண்டவர் என்று கூறப்படுகிறது. அவரது கணிப்புகளில் பெரும்பாலானவை உண்மையாகி உள்ளதால் அவரின் கணிப்புகளை பலரும் நம்புகின்றனர்.. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு குறித்த பாபா வங்காவின் கணிப்பு மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது.
பூகம்பங்கள் மற்றும் சுனாமிகள் போன்ற இயற்கை பேரழிவுகள் நடக்கும் என்று அவர் கணித்திருந்தார். 2025-ம் ஆண்டு முழு உலகிற்கும் சோகம் நிறைந்த ஆண்டாக இருக்கும், இதில் பூகம்பங்கள் மற்றும் சுனாமிகள் போன்ற பல எதிர்பாராத சம்பவங்கள் காணப்படும்’ என்று அவர் கணித்துள்ளார்.
சிரியாவின் வீழ்ச்சி குறித்தும் கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான ஒரு பெரிய போர் நடக்கும் என்றும் அவர் முன்னறிவித்துள்ளார். 2025-ம் ஆண்டில் மனிதர்கள் சர்வதேச பணிகள் மூலம் வேற்றுகிரகவாசிகளை தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள் என்றும் பாபா வங்கா கணித்திருந்தார். மேலும், வானிலையில் ஏற்படும் ஆச்சரியமான மாற்றங்களும் காணப்படும். இது தவிர, காலநிலை மாற்றமும் ஐரோப்பாவில் பெரும்பாலான மக்களை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி இந்து மதத்தின் எழுச்சி பற்றியும் அவர் கணித்துள்ளார்.. பாபா வங்காவின் கூற்றுப்படி, தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு தலைவர் உலக அரங்கில் பிரபலமடைவார். மேலும், ரஷ்யா போன்ற ஒரு சக்திவாய்ந்த நாடு இந்து மதத்தைப் பரப்பும். இருப்பினும், பேரழிவுகள் தொடர்பான பாபாவின் பெரும்பாலான கணிப்புகள் உண்மையாகிவிட்டன. ஆனால் பாபா வாங்காவின் பேரழிவு பற்றிய கணிப்பு உண்மையாகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..