துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரை மீனா சந்தித்து பேசி உள்ள நிலையில், அவர் மத்திய இணையமைச்சர் ஆகப்போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறியவர் நடிகை மீனா. 45 ஆண்டுகளை கடந்தும் மீனா திரையுலகில் பயணித்து வருகிறார். சினிமாவில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக மீனா மாறினார். ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், அஜித், பிரபுதேவா, சத்யராஜ், சரத்குமார் என அப்போது முன்னணியில் பல ஹீரோக்களுடன் மீனா ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய சினிமாவிலும் பிசியான நடிகையாக மீனா வலம் வந்தார். 2009-ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற் குழந்தை உள்ளது. விஜய்யின் தெறி படத்தின் அவரின் மகளாக நடித்தது நைனிகா தான்.
இந்த சூழலில் 2022-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட வித்தியாசாகர் உயிரிழந்தார். இதனால் உடைந்து போன மீனா, அதில் இருந்து தற்போது படிப்படியாக மீண்டு வந்துள்ளார்.
தொடர்ந்து சில வெப் சீரிஸ்கள், படங்களில் நடித்து வரும் மீனா தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறது..
இதனிடையே டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் ஒருவரின் இல்லத்திற்கு மீனா சென்றது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மீனா விரைவில் பாஜகவில் இணையப் போவதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதனை மீனா மறுத்தார்.
இந்த நிலையில் மீண்டும் அரசியல் அரங்கில் மீனா கவனம் பெற்றுள்ளார்.. துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரை மீனா சந்தித்து பேசி உள்ளார். இதுதொடர்பான போட்டோவை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“ துணை குடியரசு தலைவரை சந்தித்தது பெருமையாக இருந்தது. உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன், அது என் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வழிநடத்த உதவும் என்று நான் நம்புகிறேன். உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி.” என்று பதிவிட்டுள்ளார்.
ஆனால் மீனா – துணை குடியரசு தலைவர் சந்திப்பு அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. சில பாஜக தலைவர்களை அவர் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது மீனாவுக்கு டெல்லியில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும். கங்கனா ரணாவத் பாணியில் ஒரு புதிய முகத்தை தமிழ் நாட்டில் பாஜக உருவாக்கி வருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த கட்டமாக பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரை மீனா சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.. மீனா மத்திய துணை அமைச்சராக போகிறார் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read More : திமுகவை ஆட்டம் காண வைத்த முருக பக்தர்கள் மாநாடு.. ஸ்டாலின் பொய் பிரச்சாரம்.. அண்ணாமலை காட்டம்..