தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.. தற்போது அரசியல் தலைவராக மாறி உள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.. மேலும் பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..
இந்த படத்தை கேவிஎன் புரொட்க்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. இந்த அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
இந்த நிலையில் ஜனநாயகன் படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கூறி படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.. இந்த வழக்கை அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.. நேற்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், ஜனநாயகன் படத்திற்கு எதிராக யார் புகார் அளித்தார்? அந்த புகார் தொடர்பான விவரங்களை நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணையின் போது ஜனநாயகன் படத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் குறித்த விவரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.. அப்போது நீதிபதி, ஜனநாயகன் மீதான் புகார் நிலைக்கத்தக்கதல்ல.. அது விசாரணையில் தாக்கு பிடிக்காது..” என்று தெரிவித்தார்..
ஜனநாயகன் படத்திற்உ யு/ஏ சான்று வழங்க முடிவு செய்தபின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “ படத்தை பார்த்த பின் அனைத்து உறுப்பினர்களின் கருத்தை மண்டல உரிய அமைப்புக்கு அனுப்பி வைப்பார்.. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது.
படத்தில் பாதுகாப்புப் படைகளின் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.. எனவே பாதுகாப்பு படைகளை சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும்.. படத்தை பார்த்த பின்னர் அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளும் இணைத்து அனுப்பப்படும். உரிய காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வங்கப்படும் என கூறிய பின்னரும் மறு ஆய்வுக்கு அனுப்ப அதிகாரம் உள்ள தணிக்கை குழு தலைவர் ஆய்வுக்குழுவின் பரிந்துரைகளில் திருப்தி அடையவில்லை என்றால் மறு ஆய்வுக்கு அனுப்பலாம்.. ” என்று தெரிவித்தார்..
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்கும் விவகாரத்தில் அனைத்தும் அசாதாரணமாக உள்ளது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். ஜனநாயகன் படத்திற்கு எதிரான் புகார் எப்படி தணிக்கை வாரிய தலைவருக்கு அனுப்பப்பட்டது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.. அதற்கு, சம்மந்தப்பட்ட அந்த நபர் நேரடியாக வந்து புகாரை வழங்கினார் என்று தணிக்கை வாரியம் பதிலளித்தது..
புகார் பெற்ற அன்றே சான்றிதழ் வழங்குவதை நிறுத்தி வைப்பதாக படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கபப்ட்டதா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.. அதற்கு, ஜனவரி 5-ம் தேதி படம் மறு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டது.. தணிக்கை சான்று வழங்கும் முன்போ, மறுக்கும் முன்போ படக்குழு நீதிமன்றத்தை அணுக முடியாது.. மறு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது, நாங்கள் உரிய நடவடிக்கை எடுப்போம்.. அதற்குள் நீதிமன்றத்திற்கு வந்துவிட்டார்கள்..” என்று தணிக்கை வாரியம் தரப்பு தெரிவித்தது..
இதை தொடர்ந்து பட தயாரிப்பு நிறுவனம் தனது வாதங்களை முன்வைத்தது.. அப்போது “ சென்சார் போர்டு உறுப்பினர் புகார் அளித்துள்ளார் என்பது இன்று தான் தெரியவந்தது.. தணிக்கை குழுவில் பெரும்பான்மையினர் எதிர்ப்பு தெரிவித்தா மட்டுமே சான்று தராமல் நிறுத்தி வைக்க முடியும்.. அப்படி இல்லாத பட்சத்தில் மறு ஆய்வுக்கு எப்படி அனுப்ப முடியும்? தணிக்கை வாரியம் ஒருமுறை முடிவு செய்த பின்னர் அதன் முடிவை மறு பரிசீலனை செய்ய முடியாது..
தணிக்கை குழுவில் ஒரு உறுப்பினர் எப்படி பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவை செல்லாது என கூற முடியும்? தணிக்கை குழுவில் ஒருவர் கூறியது பரிந்துரையாக இருக்கலாமே தவிர புகாராக இருக்காது என்பது எங்கள் அனுமானம்.. சென்சார் போர்டு விதிகளை காற்றில் பறக்கவிட்டுள்ளது.. சென்சார் போர்டு சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும்..” என்று தெரிவித்தது..
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்..



