பெட்ரோல், டீசல் & வீட்டு சிலிண்டர் விலை உயர்த்தப்படுமா..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு..!

petrol diesel price

மேற்கு ஆசியப் போரின் தாக்கத்தினால், நாட்டில் பெட்ரோல் மற்றும் எரிபொருள் விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ளன. இந்நிலையில், சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளுடன் சேர்த்து, எரிவாயு விலைகளும் உயரும் என்று கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.. இது மக்களிடையே ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


எனினும், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலையில் எவ்வித உயர்வும் இருக்காது என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது..

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்ற தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. உலகளவில் பெட்ரோல் விலை உயர்ந்திருந்த போதிலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் எவ்வித எண்ணமும் இல்லை என்று பெட்ரோலியத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.

மக்கள் பதற்றமடைந்து முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டின் வசம் இரண்டு மாதங்களுக்குப் போதுமான பெட்ரோல் கையிருப்பு உள்ளதாக, பெட்ரோலியத் துறையின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார்.

மேலும், எல்பிஜி சிலிண்டர் (LPG) விலையை உயர்த்தும் எண்ணமும் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.. இந்த சூழலில் , சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பிரச்சாரங்களை நம்பி மக்கள் தேவையற்ற பதற்றத்திற்கு ஆளாகக் கூடாது என்றும், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : புதிய நிதியாண்டு 2026 : இன்று முதல் எந்தெந்த பொருட்களின் விலை குறையும்..? எதன் விலை அதிகரிக்கும்..? முழு லிஸ்ட்..!

RUPA

Next Post

Vastu Tips: பணப் பிரச்னை தீர இரவில் இந்த விஷயங்களை செய்யாதீங்க..!

Wed Apr 1 , 2026
Vastu Tips: Don't do these things at night to solve money problems..!
god

You May Like