ஜனநாயகன் படத்திற்கு க்ரீன் சிக்னல் கிடைக்குமா? சென்சார் வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு..!

jananayagan court

விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. இந்த படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார்.


எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, இது குறித்து திரைப்பட தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பினர்.. மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்..

இதனால் படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது.. தயாரிப்பு தரப்பு இந்த தடையை நீக்க உச்சநீதிமன்றத்தை அணுகியது. ஆனால் இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது..

ஜனநாயகன் சென்சார் தொடர்பான வழக்கு கடந்த 20-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.. அப்போது தணிக்கை வாரியம் தரப்பு “ ஜனநாயகன் படத்தின் 14 காட்சிகளில் மாறுதல் கோரினோம். இந்த மாற்றம் கோரிய பின்னர் தான் படத்திற்கு எதிராக புகார் வந்தது…” என்று தெரிவித்தது.

தொடர்ந்து தணிக்கை வாரியம் “ படத்தின் வெளியீட்டு தேதி முடிவெடுக்கப்பட்டுவிட்டதால் அவகாசம் வழங்க தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.. ரிட் மனுவில் பதில் மனு தாக்க செய்ய 4 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 – 3 நாட்களாவது அவகாசம் அளித்திருக்க வேண்டும்.. படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்ததே தவறு..

படத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்தும் முடிவு தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரியும்.. இந்த முடிவு ஜனவரி 5-ம் தேதி இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது. சான்று வழங்கும் நடைமுறையில் நாங்கள் தவறு செய்யவில்லை என்பதை நிரூபிக்க தனி நீதிபதி வாய்ப்பளித்திருக்க வேண்டும்..” என்று தணிக்கை வாரியம் வாதிட்டது.

தொடர்ந்து ஜனநாயகன் படக்குழு தனது வாதங்களை முன்வைத்தது. மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தகவல் தான் தெரிவிக்கப்பட்டது.. அதன் உத்தரவு நகல் வழங்கப்படவில்லை.. சான்றிதழ் வழங்குவதில் இருந்த பல தடை எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.. ஆனால் தடை இருந்திருக்கிறது.. சான்றிதழ் வழங்குவதில் இருந்த பல தடை எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை, ஆனால் தடை இருந்திருக்கிறது.. சென்சார் தொடர்பான அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. ஜனநாயகன் பட விவகாரத்தில் டிசம்பர் 29-ம் தேதிக்கு பிறகு அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளது..” என்று தெரிவித்தது..

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.. அதன்படி ஜனநாயகன் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.. இந்த தீர்ப்புக்கு பிறகு தான் ஜனநாயகன் படம் விரைவில் வெளியாகுமா? அல்லது மேலும் தாமதமாகுமா என்பது தெரியவரும்..!

Read More : “இந்த தேர்தல் என்.டி.ஏ Vs தமிழ்நாடு.. அதிமுக – பாஜக கூட்டணியை எல்லைக்குள்ளேயே விடமாட்டோம்..” முதல்வர் ஸ்டாலின் உறுதி..!

RUPA

Next Post

அரசின் இந்த திட்டத்தில் ரூ. 78,000 மானியம் பெறலாம்..! இதை செய்தால், மேலும் ரூ.1,50,000 கிடைக்கும்!

Tue Jan 27 , 2026
மோடி அரசு ஒரு நல்ல செய்தியைக் கொண்டு வந்துள்ளது. நீங்கள் ஒரே நேரத்தில் ரூ.1,50,000 பெறலாம். இது சாமானிய மக்களுக்கு ஒரு பெரிய நிம்மதி. அப்படியானால், இந்த பணத்தை எப்படிப் பெறுவது? இது யாருக்கு வழங்கப்படும்? இது போன்ற விஷயங்களை இப்போது தெரிந்து கொள்வோம். மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE), மதிப்புமிக்க ‘பிஎம் சூர்யா கர்.. முஃப்ட் பிஜ்லி யோஜனா’ திட்டத்திற்காக ஒரு புதிய சின்னத்தை […]
money 2

You May Like