ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கப் பொருளாதார நிபுணரும், மூத்த சந்தை வியூக நிபுணருமான எட் யார்டெனி தங்கம் விலை குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த பத்தாண்டின் இறுதிக்குள் தங்கத்தின் விலை கணிசமாக உயரும் என்று யார்டெனி கணித்துள்ளார்.
யார்டெனி ரிசர்ச் நிறுவனத்தின் தலைவர் எட் யார்டெனி, 2029-ஆம் ஆண்டுக்குள் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸுக்கு 10,000 டாலராக உயரக்கூடும் என்று கூறியுள்ளார். அமெரிக்கப் பங்குச் சந்தையின் முன்னணி குறியீடான எஸ்&பி 500 குறியீடும் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, நியூயார்க்கில் உள்ள கோமெக்ஸ் சந்தையில் தங்கத்தின் சர்வதேச விலை அவுன்ஸுக்கு 4400 டாலராக உள்ளது. டிசம்பர் 22 அன்று தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியது. 23-ஆம் தேதி அன்று விலை கடுமையாக உயர்ந்தது. அமெரிக்க மத்திய வங்கி விரைவில் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பே இந்த உயர்வுக்குக் காரணம். தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாகக் கருதப்படுகிறது. டாலரின் மதிப்பு குறைவதும் தங்கத்தின் விலை உயர்வுக்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. 2025-ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை 67 சதவீதம் அதிகரித்தது.
தங்கம் ரூ. 3 லட்சத்தை எட்டுமா?
தங்கத்தின் சர்வதேச விலை அவுன்ஸுக்கு 4410 டாலராக உள்ளது. இந்த பத்தாண்டின் இறுதிக்குள் தங்கத்தின் விலை அவுன்ஸுக்கு 10,000 டாலராக உயர்ந்தால், தங்கத்தின் விலை 127 சதவீதம் அதிகரிக்கக்கூடும். அதாவது, தங்கத்தின் விலை இரண்டரை மடங்கு அதிகரிக்கலாம்..
2029-ஆம் ஆண்டுக்குள் இது 127 சதவீதம் அதிகரித்தால், அதன் விலை ரூ. 3.08 லட்சமாக இருக்கும். தங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் முக்கியம். ஏனெனில், தங்கத்தின் விலை உயரும்போதெல்லாம், அது முதலீட்டாளர்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக வருமானத்தை அளித்துள்ளது என்று யார்டெனி தெரிவித்துள்ளார்.
தற்போதையை தங்கம் விலை நிலவரம்
இந்த மாதம் தொடங்கியதில் இருந்தே சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிலோ ரூ. 2,23,000 ஆக உள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை கடந்து விற்பனையாகிறது..
Read More : 2045-ஆம் ஆண்டுக்குள் உங்கள் கணக்கில் ரூ. 5 கோடி இருக்கணுமா? அப்ப இந்த முறையில் பணத்தை சேமியுங்கள்..!



