தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தள்ளிப்போகிறதா? தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை..!

tamilnadu election date eci

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 2 மாநில சட்டமன்றங்களின் 5 ஆண்டுகால பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதன்படி மேற்கு வங்கம் (மே 7 ), தமிழ்நாடு (மே 10), அசாம், (மே 20), கேரளா (மே 23), புதுச்சேரி (ஜுன் 15) என 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது..


தமிழகத்தில் தேர்தல் வன்முறை குறைவு என்பதால் பொதுவாக ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.. வட மாநிலங்களில் தான் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது..

அந்த வகையில் தற்போது நடைபெற உள்ள 5 மாநில தேர்தலை கண்காணிக்க 714 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், 233 ஐபிஎஸ் அதிகாரிகளும் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.. மேலும் 497 செலவின பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்..

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.. ஆனால் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி தான் நடந்தது.. கொரோனா காலம் என்பதால் அப்போது முன் கூட்டியே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது..

ஆனால், இந்த முறை வெயிலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தலை நடத்தலாம் என்று தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.. 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் கடைசி கட்டமாக தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் பெரும்பாலும் மே மாதத்தில் தான் தேர்தல் நடைபெற்று வருகிறது.. இதற்கு முன்பு 2001, 2006, 2016 ஆகிய ஆண்டுகளில் மே மாத சட்டமன்ற தேர்தல் நடந்துள்ளது.. 20211, 2021 ஆண்டுகளில் ஏப்ரல் மாதமே தேர்தல் நடந்துள்ளது..

அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் மே மாதமே தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.. தேர்தல் தொடர்பான அறிவிப்பு மார்ச் மாதத்தின் மத்தியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் வந்துள்ளனர்.. இந்த குழுவினர் இன்று முதல் 3 நாட்கள் அரசியல் கட்சிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் சென்னையில் வைத்து ஆலோசனை நடத்த உள்ளனர்.. இதில் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது, தேர்தல் முன்னேற்பாடுகள், தேர்தல் தேதி உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அப்போது சட்டமன்ற தேர்தல் தேதி குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது..

Read More : சசிகலா தொடங்கியுள்ள புதிய கட்சியின் பெயர் இதுதான்..!! கொள்கைகள் என்ன..? கசிந்த தகவல்..!!

RUPA

Next Post

அரசுப் பேருந்துகளில் இனி பாடல்கள் ஒலிக்க தடை..!! போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு..!!

Thu Feb 26 , 2026
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் இனி பாடல்கள் மற்றும் ரேடியோ சத்தங்கள் ஒலிக்கக் கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுப் பேருந்து பயணத்தின் போது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தங்களுக்கு விருப்பமான பாடல்களை அதிக சத்தத்துடன் ஒலிக்கவிடுவதால், பயணிகளுக்குப் பெரும் அசௌகரியம் ஏற்படுவதாக எழுந்து வந்த புகார்களுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட தூரப் பயணங்களின் போது பேருந்துகளில் அதிரும் சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பப்படுவது பயணிகளின் […]
TN Bus 2026

You May Like