பெண்கள் எப்போதும் தங்களை அழகாக வைத்துக்கொள்ள விரும்புவார்கள். முக அழகுக்கே அதிக கவனம் செலுத்தினாலும், உடலின் பிற பாகங்களை புறக்கணிப்பதுண்டு. குறிப்பாக, கர்ப்பக்காலத்திலும் பிரசவத்திற்குப் பிறகும் வயிற்றில் உருவாகும் தழும்புகள் (Stretch Marks) பெண்களுக்கு பெரும் சிரமமாகிறது. ஆனால் சில எளிய பராமரிப்பு முறைகள், இயற்கை எண்ணெய்கள் மற்றும் வீட்டில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த தழும்புகளை குறைக்க முடியும்.
கர்ப்பக்காலத்தில் தழும்புகள் வராமல் தடுப்பது எப்படி? பொதுவாக கர்ப்ப காலத்தின் 7ஆம் மாதம் முதல் வயிற்று விரிவடையும்போது சருமத்தில் விரிசல் ஏற்பட்டு தழும்புகள் தோன்றும். இந்த நேரத்தில் ரசாயனக் கிரீம்களை பயன்படுத்துவது குழந்தையின் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதனால், தேங்காய் எண்ணெய் மட்டும் பாதுகாப்பானது. தினமும் வயிற்றில் தேங்காய் எண்ணெயை தடவி மசாஜ் செய்தால், சருமம் ஈரப்பதம் பெற்று விரிசல் குறையும்.
பிரசவத்திற்குப் பிறகு செய்யக்கூடிய இயற்கை பராமரிப்பு
தேங்காய் எண்ணெய்: முன்னோர்கள் காலம் தொட்டு பயன்படும் சிறந்த மருத்துவம். பிரசவத்துக்கு பிறகும் தினமும் தடவி வந்தால், தழும்புகள் மெதுவாக மங்கும்.
கடுகு எண்ணெய் + மஞ்சள்: 100 கிராம் கடுகு எண்ணெயை சூடுபடுத்தி, அதில் 5 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பாட்டிலில் சேமிக்கலாம். குளித்த பின், இரவு படுக்கும் முன் வயிற்றில் தடவவும். 3–4 மாதங்களில் இயல்பான தழும்புகள் மறையும்; பிரசவ தழும்புகள் 6 மாதம் வரை எடுத்துக்கொள்ளலாம்.
கற்றாழை (Aloe Vera): கற்றாழையின் உள்ளிருக்கும் ஜெல் பகுதியை எடுத்து வயிற்றில் தடவவும். 3 மாதங்களில் கணிசமான மாற்றம் தெரியும். ஆனால் கர்ப்பகாலத்தில் பயன்படுத்தக்கூடாது.
கோகோ பட்டர் (Cocoa Butter): பிரசவத்துக்கு முன் பயன்படுத்தக் கூடாது. பிரசவத்திற்குப் பிறகு, ஒரு வாரம் கழித்து வயிற்றில் தடவலாம். 3 மாதங்களில் தழும்புகள் குறையத் தொடங்கும்.
தவிர்க்க வேண்டியவை: எலுமிச்சை சாறு + சர்க்கரை ஸ்க்ரப் போன்ற கடுமையான முறைகள் வயிற்றுச் சருமத்தை சேதப்படுத்தலாம். மருத்துவ ஆலோசனையின்றி ரசாயனக் கிரீம்களை பயன்படுத்த வேண்டாம்.
குறிப்பு: உடல் நலம் சார்ந்த எந்த முடிவையும் எடுப்பதற்கு முன், மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.
Read more: ரூ.5,71,001க்கு ஏலம் போன தேங்காய்! இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?



