2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. தமிழகத்தின் பிரதான கட்சிகள் ஏற்கனவே தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் தனது முதல் தேர்தலை சந்திக்கும் தவெக தேர்தல் தொடர்பாக பல வியூகங்களை அமைத்து வருகிறது. சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது விஜய்க்கு கூடுதல் பலமாக உள்ளது.
தவெகவில் இணைந்த அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் போன்ற முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக்கழக கட்சியில் இணைந்த அவர் தனது அடுத்த கட்ட நடவடிக்கையான கூட்டணி பேச்சு வார்த்தையை கையில் எடுத்துள்ளார்.
இந்த நிலையில், ஈரோட்டில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் அணி அணியாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருக்கிறார்கள். மக்கள் சக்தியின் ஆதரவால் தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகிப்பார்
ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்குவதற்கு மக்கள் சக்தியோடு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 18ஆம் தேதி சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருகிறார்கள் என்றார். மேலும் சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு போட்டி என யாரையும் சொல்ல முடியாது. த.வெ.க.வுக்கு மக்கள் சக்தி இருக்கிறது என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை உண்டா? என்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் களம் என்பது எப்படி செல்லும் என யாராலும் கணிக்க முடியாது என கூறினார். அ.தி.மு.க.வுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு, அதனை நீங்கள்தான் கூற வேண்டும் என கூறினார். த.வெ.க.வின் விருப்பமனு தேதியை விஜய் அறிவிப்பார் என்றும் செங்கோட்டையன் கூறினார்.
Read more: வீட்டு வைத்தியம் மூலம் 2 மடங்கு உடல் எடையை குறைக்கலாம்..!! இந்த ஒரு பானம் போதும்..!!



