2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது..
2026 தேர்தல் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான் போட்டி என்று விஜய் தொடர்ந்து கூறி வருகிறார்.. மேலும் விஜய்யின் தவெகவுக்கு 20% வாக்கு வங்கி இருப்பதாக சில அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.. தவெகவினரோ விஜய்க்கு 30% வாக்கு இருப்பதாகவும், 2026 தேர்தலில் விஜய்யின் தவெக ஆட்சியமைப்பது உறுதி என்றும் கூறி வருகின்றனர்.. விஜய் முதல்வராவது உறுதி என்று சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்..
இந்த நிலையில் பிரபல ஜோதிடர் பிரசாந்த் கினி, தவெக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணித்துள்ளார்.. அதன்படி “வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தமிழ் நடிகர் விஜய்யின் கட்சி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.. அவரின் கட்சி ஒற்றை இலக்கத்தில் தான் வெற்றி பெறும்..” என்று கணித்துள்ளார்.. அவரின் இந்த கணிப்பு வைரலாகி வருகிறது..

பிரபல ஜோதிடராக கருதப்படும் ஏற்கனவே சமந்தாவின் 2-வது திருமணம், வங்கதேச பிரதமருக்கு ஏற்பட்ட சிக்கல், சமீபத்தில் நடந்த டெல்லி குண்டுவெடிப்பு என பல நிகழ்வுகளை துல்லியமாக கணித்ததாக கூறப்படுகிறது.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்திலும் அவர் பதிவிட்டு வருகிறார்.. அதே போல் 2026 தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் எனவும், ஆனால் இந்த தேர்தலில் வாக்கு சதவீதம், வெற்றி பெறும் தொகுதிகள் குறையும் அவர் கணித்துள்ளார்.. 2026 தேர்தல் குறித்து அவரின் கணிப்புகள் எந்தளவு உண்மையாகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..



