நிதிச் சிக்கல்கள் இல்லாத வாழ்க்கையை வாழ நிதிப் பாதுகாப்பு மிகவும் முக்கியம். நிதிப் பாதுகாப்பை அடைய, சேமிப்பது அல்லது முதலீடு செய்வது அவசியம். இருப்பினும், சமீப காலங்களில், சேமிப்பு மற்றும் முதலீடுகள் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் முதலீடு செய்வதற்கு தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களே சிறந்த வழியாகும். இந்த சேமிப்புத் திட்டங்கள் மூலம் அரசாங்கம் பல்வேறு வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தினமும் ரூ.100 முதலீடு செய்வதன் மூலம் ரூ.2 லட்சம் சம்பாதிக்க உதவும் ஒரு திட்டத்தைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
தபால் அலுவலகங்கள் மூலம் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் ஒரு சிறந்த திட்டம் தான் அஞ்சலக தொடர் வைப்புத் திட்டம் (Post Office RD). இந்தத் திட்டத்தின் காலம் ஐந்து ஆண்டுகள். இது ஆண்டுக்கு 6.7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் பாதுகாப்பான வருமானத்தைப் பெறலாம்.
இந்தத் திட்டத்தில் நீங்கள் தினமும் ரூ.100 முதலீடு செய்தால், அது மாதத்திற்கு ரூ.3,000 ஆகும். இந்த ரூ.3,000-ஐ நீங்கள் அஞ்சலக தொடர் வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் நீங்கள் ஒரு வருடத்தில் ரூ.36,000 சேமிக்கிறீர்கள்.
இந்த முதலீட்டை நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால், உங்கள் மொத்த முதலீடு ரூ.1,80,000 ஆக இருக்கும். இந்தத் தொகைக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் வட்டியுடன் சேர்த்து, திட்டத்தின் முடிவில் வட்டியுடன் சேர்த்து ரூ.2,14,097 பெறுவீர்கள்.
Read More : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்..! மதுபானம் விலை உயர்வு..! எவ்வளவு தெரியுமா?



