எதையுமே கொடுக்காமல், யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? தமிழக அரசுக்கு விஜய் கேள்வி..!

tvk vijay n 2

போதைப் பொருட்கள் புழக்கத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை விஜய் வலியுறுத்தி உள்ளார்.


தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், நேற்று மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை. இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியத்தையும் பொறுப்பின்மையையுமே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை. இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி கற்க, ஏற்ற சூழல் இல்லை. தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லை. புத்தாக்கம் இல்லை. புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் இல்லை. இவை எவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்காமல், யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? எஞ்சியிருக்கக் கூடிய ஆட்சிக் காலத்திலாவது போதைப் பொருட்கள் புழக்கத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கபட நாடக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்..

Read More : திடீரென தவெகவை அட்டாக் செய்யும் அதிமுக.. கண்டுகொள்ளாத விஜய்.. இபிஎஸ் கனவு பலிக்குமா?

RUPA

Next Post

விளைவுகளை சந்திக்க நேரிடும்.. ஆபாச உள்ளடக்கங்கள் குறித்து சமூக ஊடக தளங்களுக்கு அரசு எச்சரிக்கை..

Tue Dec 30 , 2025
சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் அசிங்கமான, அநாகரிகமான, பாலியல் உள்ளடக்கங்கள், சிறார்களை சிதைக்கும் பதிவுகள் மற்றும் சட்டவிரோத தகவல்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வகை உள்ளடக்கங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டப்படி வழக்கு தொடரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் 29 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆலோசனை மூலம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப […]
social media

You May Like