மூடநம்பிக்கை என்பது மக்களை காலம் காலமாக மூட்டளாக்கி வருகிறது. நம்பிக்கை என்ற பெயரில் கண்மூடித்தனமாக ஒரு விஷயத்தை நம்புவது என்பது சமூகத்தில் பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. மூடநம்பிக்கைக்கு எதிராக பல தலைவர்கள் தொடர் பிரசாரம் செய்தபோதிலும், அது நின்றபாடில்லை. பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி மக்களிடம் இருந்து பணத்தை மோசடி செய்யப் பார்ப்பார்கள். பண மோசடி மட்டுமின்றி பல மோசமான சம்பவங்களையும் செய்கிறார்கள்.
அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் 10 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த அனுராதா (35) என்ற பெண் தனது தாயுடன் தாந்தரீகம் செய்யும் மந்திரவாதியின் உதவியை நாடியுள்ளார். தீய ஆவி பிடித்திருப்பதாக கூறிய மந்திரவாதி, பெண்ணின் தலைமுடியை இழுத்தும், கழுத்தும் கழிவறை நீரை குடிக்க கட்டாயப்படுத்தியுள்ளார். அவரது தாயார் தடுக்க முயன்றும் தொடர்ந்து கழிவு நீரை குடிக்க வைத்தார்.
சடங்கின் போது அனுராதாவின் உடல் நிலை மோசமான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பெண்ணின் தந்தை கருத்தரிக்க பூஜை செய்வதாக கூறி ரூ.1 லட்சம் பணம் கேட்டார். ரூ.22 ஆயிரம் முன்பணமாக பெற்றுக்கொண்டதாக என காவல் நிலையத்தில் தெரிவித்தார்.
உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த மந்திரவாதி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவருடன் இருந்த கூட்டாளிகள் தலைமறைவான நிலையில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். மூட நம்பிக்கையால் 35 வயது பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
Read more: விசிகவுக்கு புதிய பொதுச்செயலாளர்..? தலித் அல்லாத ஒருவருக்கு பதவி வழங்க திருமா முடிவு..!!