சத்தீஸ்கரில் உள்ள ஒரு பூங்காவில் வேடிக்கை நிறைந்த, சாகச ரைடு, ஒரு பெண்ணுக்கு ஒரு கெட்ட கனவாக மாறியது. ஒரு ஜெயண்ட் வீலில் சவாரி செய்யும் போது, அப்பெண் சமநிலையை இழந்து பகுதியளவு திறந்திருந்த கேபினிலிருந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, அவரால் அந்த பிரமாண்டமான கட்டமைப்பைப் பிடித்துக் கொள்ள முடிந்தது. ஜெயண்ட் வீலின் ஊழியர் என்று அடையாளம் காணப்பட்ட ஒரு துணிச்சலான மனிதர் அப்பெண்ணை பத்திரமாக மீட்டுள்ளார்.. சத்தீஸ்கரின் பலோடபஜாரின் படாபராவில் உள்ள ஒரு பூங்காவில் இந்த சம்பவம் நடந்தது.
கெட்ட கனவாக மாறிய சவாரி
இந்த முழு சம்பவமும் பூங்காவில் இருந்தவர்களால் படம்பிடிக்கப்பட்டது, மேலும் அந்த பயங்கரமான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில் அந்தப் பெண் இரண்டு கேபின்களுக்கு இடையில் ராட்சத சக்கரத்தில் தொங்குவதைக் காணலாம். அவர் உதவிக்காக அழுவதையும் பார்க்க முடிகிறது.. பின்னர் ஒரு துணிச்சலான மனிதர் தைரியத்தைக் காட்டி, கூடியிருந்த கூட்டத்தினரிடமிருந்து அவளுக்கு உதவ ஓடுகிறார். அவர் ஊழியர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது.
அந்த நபர் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ராட்சத சக்கரத்தில் ஏறி சிக்கித் தவிக்கும் பெண்ணுக்கு கை கொடுத்து அவரை ஆறுதல்படுத்துகிறார், மேலும் கீழே உள்ள கேபினில் கவனமாக ஏறச் சொல்கிறார். சிக்கித் தவிக்கும் பெண் பின்னர் அவரது கையைப் பிடித்து கீழே உள்ள கேபினில் குதிக்கிறார். அவரது துணிச்சலான இந்த செயலால், அந்தப் பெண் எந்த உயிரிழப்பும் ஏற்படாமல் காப்பாற்றப்பட்டார்.
அந்த ஊழியரின் துணிச்சலுக்கு இணையவாசிகள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். அவர் காப்பாற்ற வராவிட்டால், அந்தப் பெண் 30 அடி உயரத்தில் இருந்து விழுந்திருக்கலாம் என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்..
கடந்த வாரம், சவுதி அரேபியாவில் ஒரு பொழுதுபோக்கு பூங்கா சவாரி செயலிழந்ததில் குறைந்தது 23 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தைஃப்பில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் நடந்தது. ரைடின் மையக் கம்பம் இரண்டு பகுதிகளாக உடைந்ததை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினும் சம்பவம் நடந்த நேரத்தில், பல இளைஞர்கள் மற்றும் பெண்கள் சவாரியை அனுபவித்துக்கொண்டிருந்தனர். இந்த விபத்தில் பலர் காயமடைந்தனவர்.. அவர்களில், 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.